SHRI ABIRAMI ANTHATHI Lyrics in Tamil | அபிராமி ஆந்தாதி ( சில பாடல்கள்)

அபிராமி ஆந்தாதி

( சில பாடல்கள்)

நல்வித்தையும் ஞானமும் கிடைக்கும் 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலக முணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை 
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமதோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி யென்றன் விழுத்துணையே.1

உயர் பதவிகளை அடையலாம் 

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னிக் 
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் 
பனிதருந் திங்களும் பாம்பும் பகீரதி யும்படைத்த 
புனிதரும் நீயுமென் புந்தியெந்நாளும் பொருந்துகவே.2

மலையென வரும் துன்பம் பனியென நீங்கும் 

ததியுறு மத்திற் சுழலுமென்னாவி தளர்விலதோர் 
கதியுறு வண்ணம் கருதுகண்டாய்கம லாலயனும் 
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கியென்றும்
 துதியுறு சேவடி யாய்சிந்துரானன சுந்தரியே.3

வைராக்கிய நிலை ஏற்படும்.

பூத்தவ ளேபுவனம்பதி வான்கையும் பூத்தவண்ணம் 
காத்தவுளேபின்கரத்தவ ளேகரைக் கண்டனுக்கு
மூத்தவ ளோன்றும்மூவா முகுந்தற்கு இளையவளே 
 மாத்தவ ளேஉன்னையன்றி மற்றோர்தெய்வம் வந்திப்பதே 4

மரணத்தை வெல்லலாம்

வவ்விய பாகத்து இறைவரும் தீயும் மகிழ்ந்திருக்கும் 
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே 
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து 
வெவ்விய காலன்றன் மேல்வரும்போது வெளி நிற்கவே. 5

வீடு, நிலம் முதலிய செல்வங்கள் கிடைக்கும் 

உறைகின்றதின் திருக்கோயிலின் கேள்வரொருபக்கமோ 
அறைகின்ற நான்மறையின் அடியோமுடி யோவமுதம் 
நிறைகின்ற வெண்திங்க ளோகஞ்சமோஎன்றன் நெஞ்சகமோ 
மறைகின்ற வாரிதி யோபூர ணாசல மங்கலையே. 6

தீராத வியாதிகள் தீரும் 

மணியே மணியி னொளியே யொவிரும் மணிபுனைந்த 
அணியே அணியும் அணிக்கழ கேயனு காதவர்க்குப் 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே 
பணியே னொருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.7

நினைத்த காரியம் இடையூறின்றி ஈடேறும் 

பின்னே திரிந்துன் னடியாரைப் பேணிப் பிறப்பறுக்க 
முன்னே தவங்கள் முயன்றுகொண் டேன்முதன் மூவருக்கும் 
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே 
என்னே இனியுன்னை யான்மற வாமல்நின் றேத்துவனே. 8

மனநோய் தீரும் 

உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு 
படைத்தனை பத்மபதயுகம் குடும் பணி எனக்கே 
அடைத்தனை நெஞ்சத்தழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் 
துடைத்தனை ஸுந்தரி நின்அருள் ஏதென்று சொல்லுவதே. 9.

அகால மரணமும் துர்மரணமும் ஏற்படாதிருக்கும் 

ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப் 
பாசத்தில் அல்லல்பட இருந்தேளை நின்பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே.10

Also Read MahaVishnu Thuthi Padagal Click Here

பயிர் வளரும் செல்வம் செழிக்கும்

வந்தே சரணம் புகும்அடி யாருக்கு வானுலகம் 
தந்தே பரிவோடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
 பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும்பொன் 
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.11

தீமை, பகையெல்லாம் ஒழியும்

பரிபுரச் சீறடிப் பாசாங் குசைபஞ்ச பாணியின்சொல்
திரிபுர சுந்தரி சிந்தூர மேனியன் தீமைநெஞ்சில் 
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப் புச்சிலைக்கை 
எரிபுரை மேனி இறைவர்செம் பாகத் திருந்தவளே.12

அம்பிகையை நேரில் காணலாம்

நாயகி நான்முகி நாராயணிகை தனினபஞ்ச 
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு 
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கிஎன்று 
ஆயகியாதி உடையாள் சரணம் அரண்நமக்கே.13

வறுமை ஒழியும்

ஐயன் அளந்த படிஇரு நாழிகொண்டு அண்டம்எல்லாம் 
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால் 
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலை யும்கொண்டு சென்றுபொய்யும் 
மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே. 14

மாயையை வெல்லலாம்

நாயேனையும் இங்குஒரு பொருளாக நயந்துவந்து 
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்நின்னை உள்ளவண்ணம் 
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்னபேறு பெற்றேன்.
தாயே மலைமகளே செங்கண் மால்திருத் தங்கைச்சியே.15

கல்வி சிறக்கும்

வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச்செம் 
பல்லவம் அல்லது பற்றொன்றி லேன்பசும் பொற்பொருப்பு 
வில்லவர் தம்முடன் வீற்றிருப் பாய்வினையேன் தொடுத்த 
சொல்அவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.16

பகைவர்கள் அழிவர்

தோத்திரம் செய்து தொழுதுமின் போலும்நின் தோற்றம்ஒரு 
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மைகுலம்
கோத்திரம் கல்வி குணங்குன்றி நாளும் குடில்கள்தொறும் 
பாத்திரம் கொண்டு பலிக்குழ லாநிற்பர் பாரெங்குமே. 17

Also Read Kolaru Pathigam Click Here

நிலம், வீடு, தோட்டம் போன்ற செல்வங்கள் பெருகும் 

பாரும் புனலும் கனலும்வெங் காலும் படர்விசும்பும் 
ஊரும் முருகு சுவையொளி ஊறொலி யொன்றுபடச் 
சேருந் தலைவி சிவகாம சுந்தரி சீரடிக்கே 
சாருந் தவமுடையார் படையாத தனம் இல்லையே. 18

சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் 

தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா 
மனம்தரும் தெய்வவடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லனவெல்லாம் தரும்அன்ப ரென்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள்அபி ராமிகடைக் கண்களே.19

மனக்குறை தீர்ந்து மகிழ்ச்சி பெருகும் 

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி யருமறைகள் 
பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பனி மாமதியின் 
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க 
இழவுற்று நின்றநெஞ்சே இரங்கேல் உனக்கென் குறையே.20

தொழிலில் மேன்மை அடையலாம்

 நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும் 
அயனும் பரவும் அபிராம வல்லி அடிஇணையைப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன் 
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 21

விதியையும் வெல்லலாம் 

தங்குவர் கற்பகத் தாருவின் நிழலில் நாயர்இன்றி 
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் 
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக்
கொங்கிவர் பூங்குழ லாள்திரு மேனி குறித்தவரே.22

Also Read Shri Abhirami Sthothiram Click Here

பகை அச்சம் நீங்கும்

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி குலி வராகியென்றே 
செயிரவி நான்மறை சோதிரு நாமங்கள் செப்புவரே.23

நிலையான மனமகிழ்ச்சி பெறலாம் 

கூட்டிய வாவென்னைத் தன்னடி யாரிற் கொடியவினை 
ஓட்டிய வாவென்கண் ஓடிய வாதன்னை உள்ளவண்ணம் 
காட்டிய வாகண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வாதட மாடகத் தாமரை யாரணங்கே 24

எப்பொழுதும் அம்பிகையின் அருள் கிடைக்கும் 

பரமஎன்று உனையடைந்தேன் தமியேனும் உபைத்தருக்குள் 
தரம்அன்று இவன் என்று தளைத்தகாது தரியலாதம்.
புரம்அன்று ஏசியப் பொருப்புவில் வாங்கிய போதில்அயன் சிரம்ஒன்று செற்றகை யான்இடப் பாகம் சிறந்தவளே 25

அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும் 

மெல்லிய நுண்ணிடை மின்னனை யாளை விரிசடையோன் 
புல்லிய மென்முலைப் பொன்னனை யானைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழுமடி யாரைத் தொழுமவர்க்குப் 
பல்லிய மார்த்தெழ் வெண்பக ஒரும் பதத்தகுமே 26

மனம் உறுதி பெறும்

நன்றே வருகினும் தீதே விளைகினும் நான்அறிவது. 
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம்எனக்கு உள்ளஎல்லாம் 
அன்றே உனதுஎன்று அளித்துவிட் டேன்ஆழி யாதகுணக் 
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.27

புகழும் தர்மமும் வளரும் 

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமராதங்கோன் 
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி 
காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல் 
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.28

அம்பிகையை மனத்தில் காணல் 

குழையைத் தழுவிய கொன்றையற் தார்கமழ கொங்கைவல்லி 
கழையைப் பொருத் திருநெடுந்தோளும் கரும்புவில்லும் 
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்நகையும் 
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்லப் போதும் உதிக்கின்றனவே. 29

நூற்பயன்

ஆத்தாளை எங்கள்அபி ராமவல்லியை அண்டமெல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவிஅடங்கக் 
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்புவில்லும் 
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே. 30

சுபம்

Also ReadRajarajeshwari-stotram click Here


அபிராமி அந்தாதி (தமிழ்: அபிராமி அந்தாதி, ரோமானியப்படுத்தப்பட்ட என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருக்கடையூர் அமிர்தகதேஸ்வரர் சிவன் கோயிலில் வணங்கப்படும் தெய்வமான அபிராமியின் மீது பாடப்பட்ட ஒரு தமிழ் கவிதைத் தொகுப்பு ஆகும். இக்கவிதையை இயற்றியவர் அபிராமி பட்டர் (அவரது இயற்பெயர் சுப்பிரமணியம்) அவர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், அவர் தஞ்சையின் முதலாம் செர்போஜியின் சமகாலத்தவர்.


அபிராமி பட்டர், சக்தி தேவியின் தீவிர பக்தர். ஒருமுறை, முதலாம் செர்போஜி மன்னன் திருக்கடவூர் கோயிலுக்கு அமாவாசை தினத்தன்று சென்று அது என்ன நாள் என்று கேட்டபோது, ​​அது பௌர்ணமி என்று சொன்னான் - ஏனெனில் அந்தத் தருணத்தில் திதி எனப்படும் சமயச் சடங்குகளைக் கடைப்பிடித்து வந்தான். ஸ்ரீ சக்ர நவாவரண க்ரமத்தில் நித்ய ஆராதனை செய்து, பௌர்ணமி திதியில் அம்மனை வழிபட்டார். மன்னன் இந்த சடங்கு பற்றி அறிந்திருக்கவில்லை, அவனுடைய கோபத்தைத் தூண்டி, பட்டருக்கு மரண தண்டனை விதிக்கச் செய்தான். தேவி தன் முன் தோன்றி வானத்தை நோக்கி தன் காதணியை எறியும் வரை இந்த அந்தாதியை ஆசிரியர் பாடியதாக புராணம் கூறுகிறது.

 பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அபிராமி அந்தாதியை பாராயணம் செய்தால் அசாத்தியமான வரங்கள் கிடைக்கும் என தமிழ் சாக்தங்கள் நம்புகின்றன.

Post a Comment

0 Comments