Sree Vishnu Dhyanam lyrics in tamil - ஸ்ரீ விஷ்ணு தியானம் தமிழில்

ஸ்ரீ விஷ்ணு தியானம் 

ஓம் நமோ பகவதே வாஸுதே'வாய ! 

 மஹா மந்திரத்தை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்?

  1. இதை த்வாதசாக்ஷரீ மஹா மந்த்ரம் என்று சொல்வார்கள் . 
  2. இதை எல்லா விஷ்ணு சந்நிதிகளிலும் சொல்லி வணங்கலாம் .
  3. திருக்கோவிலை வலம் ( ப்ரதக்ஷிணம் ) வரும்போது சொல்லலாம் .
  4. வீட்டில் விஷ்னு சம்பந்தமான ப்ரார்த்தனைகள் செய்யும்பொழுது சொல்லலாம் .
  5. குடும்பத்துடன் தன் வீட்டில் மாலை ( ஸந்த்யா காலத்தில் ) தீபம் ஏற்றியபடி கூட்டுப்ரார்த்தனை செய்துவர வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும் .
  6. நோய்களின்றி வாழலாம் .
  7. வியாபாரத்தில் , செய்தொழிலில் உயர் பதம் கிடைத்து , அனந்தகோடி லாபம் கிடைத்திடும் . 
  8. மழலைச் செல்வங்கள் நிறைந்து நன்மையுடன் வாழ்வார்கள்
ஸ்ரீ விஷ்ணு மகா மந்திரம்
ஸ்ரீ விஷ்ணு மகா மந்திரம்
Download Now
108 பெருமாள் பெயர்கள் தமிழில் காண - click here

1.ஸ்ரீ விஷ்ணு தியானம்

ஓம் ஹரி , ஸ்ரீஹரி , நரஹரி , முரஹரி , கிருஷ்ணஹரி , அம்புஜாக்ஷா , அச்சுதா , உச்சிதா பஞ்சாயுதா , பாண்டவதூதா , லக்ஷ்மீ ஸமேதா , லீலாவிநோதா , கமலபாதா , ஆதிமத்தியாந்த ரஹிதா , அநாத ரக்ஷகா , அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகா , பரமானந்த முகுந்தா , வைகுந்தா , கோவிந்தா.

பச்சைவண்ணா , கார்வண்ணா , பன்ன கசயனா , கமலக்கண்ணா , ஜனார்த்தனா , கருடவாஹன , ராக்ஷஸ மர்த்தனா , காளிங்கநர்த்தனா , சேஷசயனா , நாராயணா , பிரமபாராயணா , வாமனா , நந்த நந்தனா , மதுசூதனா , பரிபூரணா , சர்வகாரணா , வெங்கட்ரமணா , சங்கட ஹரணா,

ஸ்ரீதரா , துளசீதரா , தமோதரா , பீதாம்பரா , சீதா மனோஹரா , மச்சகச்சவராஹவதாரா , பலபத்ரா , சங்குசக்ரா , பரமேஸ்வரா , ஸர்வேஸ்வரா , கருணாகரா , ராதாமனோஹரா , ஸ்ரீரங்கா , ஹரிரங்கா , பாண்டுரங்கா , லோகநாயகா , பத்மநாபா , திவ்ய சொரூபா

புண்ய புருஷா , புருஷோத்தமா , ஸ்ரீராமா , ஹரிராமா , பரந்தாமா , நரசிம்மா , திரிவிக்கிரமா , பரசுராமா ஸஹஸ்ரநாமா , பக்தவத்சலா , பரமதயாளா , தேவானுகூலா , ஆதிமூலா , ஸ்ரீலோலா , வேணுகோபாலா , மாதவா , யாதவா , ராகவா , கேசவா , வாசுதேவா , தேவதேவா , ஆதிதேவா , ஆபத்பாந்தவா , மஹானுபாவா ,

வாசுதேவதநயா , தசரததநயா , மாயா விலாசா , வைகுண்டவாசா , சுயம் ப்ரகாசா வெங்கடேசா , ஹ்ருஷிகேசா , சித்தி லிலாசா , கஜபதி , ரகுபதி , சீதாபதி வெங்கடாஜலபதி , மாயா , ஆயா , வெண்ணையுண்டசேயா , அண்டர்களேத்தும் தூயா , உலகமுண்ட வாயா , நானா உபாயா , பக்தர்கள் சகாயா , 

சதுர்புஜா , கருடத்வஜா , கோதண்டஹஸ்தா , புண்டரீக வரதா , ஓ விஷ்ணு , ஓ பராத்பரா , பரமதயாளா , ஓம்நமோ நாராயணா , ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே ,

ஸ்ரீமதே நாராயணாய நம : ஸ்ரீமதே ஆதிநாராயணாய நம ஸ்ரீமதே லக்மி நாராயணாய நம ஸ்ரீ மதே பத்ரி நாராயணாய நம ஸ்ரீமதே ஹரிநாராயணாய நம : - ஸ்ரீமதே சத்ய நாராயணாய நம ஸ்ரீமதே சூர்ய நாராயணாய நம ஸ்ரீமதே சங்கர நாராயணாய நம ஓம் . 

கோவிந்த கோவிந்த 
கோபால கோபால

Sree Vishnu Dhyanam lyrics in tamil

2.ஸ்ரீ விஷ்ணு பாடல்

திருப்பதி மலைமேல் இருப்பவரே 
தீராத வினைகளைத் தீர்ப்பவரே 
விருப்புடன் அன்பர் பணி ஏற்பவரே 
வேண்டிய வரங்களைத் தருபவரே 
ஏழுமலை மேல் இருப்பவரே 
ஏழைகள் துயரம் தீர்ப்பவரே 
அனுதினம் கல்யாண வைபோகரே 
அலர்மேலு மங்கை மணாளரே 
வெங்கடாஜலபதி பெருமாளே 
வேண்டிடும் எங்களைக் காப்பவரே 
இக்ஷனம் எமக்கருள் புரிவாயே 
ஈரேழு லோக நாயகனே

2.1.ஸ்ரீ விஷ்ணு பாடல்

நாநாரத்ன கிரீட குண்டலதரம் 
பீதாம்ப ராலங்க்ருதம் 
மாலா கௌஸ்துப ரத்ன கங்கண தரம் 
கேயூர ஹாரா விதம் 
மேகஸ்யாமள விக்ரஹம் தனுப்ருதாம் 
ஸர்வார்த்தி ஸம்ஸோஷகம் 
வந்தே ஸர்வ மனோஹரம் - ஸுபகரம் 
ஸ்ரீ ஸ்ரீ நிவாஸம் பஜே .

Post a Comment

0 Comments