Mahavishnu thuthi padalgal / மகாவிஷ்ணு துதிப் பாடல்கள்

Mahavishnu thuthi padalgal  மகாவிஷ்ணு துதிப் பாடல்கள்
Mahavishnu thuthi padalgal  மகாவிஷ்ணு துதிப் பாடல்கள்

மகாவிஷ்ணு ஸ்தோத்திரங்கள் 

மகாவிஷ்ணு துதிகள்

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் 
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. 1

என்னெஞ்சம் மேயான்என் சென்னியான், தானவனை 
வன்னெஞ்சங் கிண்ட மணி வண்ணன்  முன்னம் சேய் 
ஊழியான் ஊழிபெயர்த்தான், உலகேத்தும் 
ஆழியான் அத்தி யூரான்.2. 

உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்
 மயர்வற மதிநலம் அருளினன் எவனவன் 
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்
 துயரறு சுடரடி தொழுதொழு என்மனமே! 3

புண்ணியம் செய்த நல்ல புனலொடு மலர்கள்தூவ 
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பறுக்கும் அப்பால் 
திண்ணம்நாம் அறியச் சொன்னோம் செறிபொழிலனந்தபுரத்து 
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். 4

நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் 
புன்மையாகக் கருத வராத லின் 
அன்னையாய் அத்தனாய் என்னையாண் டிடும் 
தன்மையான் சடகோபன் என் நம்பியே.5

Read also அந்திமக் காலத்தில் நாம் படும் சிரமங்கள் பற்றி  முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் கூறுவது

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற 
அருளினான் அவ்வரு மறையின் பொருள் 
அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் 
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே.6

அத்தியூரான் புள்ளையூர்வான் அணிமணியின் 
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான-மூத்தி 
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும் 
இறையாவன் எங்கள் பிரான்..7

உலகமுண்ட பெருவாயா! உலப்பின் கீர்த்தியம்மானே! 
நிலவும் சுடர்சூழொளி மூர்த்தி! நெடியாய்! அடியேனாருயிரே! திலதமுலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே! 
குலதொல்லடியேன் உன்பாதம் கூடுமாறு கூறாயே.8

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை யுறைமார்பா! 
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னையாள்வானே! 
நிகரிலமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே! புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!9

வாரண மாயிரம் சூழவலம் செய்து 
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றுஎதிர் 
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும் 
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான் 10

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத 
முத்து உடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் 
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்துஎன்னை
 கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி! நான் 11

கம்பமதயானைக் கழுத்தகத்தின் மேலிருந்து 
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன் 
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கடமலை மேல் 
 தம்பமாய் நிற்கும் தவமுடையெனாவேனே.12

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயில் வாசல்
 அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் 
படியாய்க் கிடந்து உன்பவளவாய்க் காண்பேனே 13.

Post a Comment

0 Comments