![]() | |
கோளறு திருப்பதிகம் pdf |
திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்:-
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு(ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.1
என்பொடு கொம்பொடாமை யிவை மார்பி லங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறும்
உடனா யநாள்க ளவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே.2
Read also - Mahavishnu thuthi padalgal / மகாவிஷ்ணு துதிப் பாடல்கள்
உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.3
மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோ துமெங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தாதர் கொடுநோய் ளான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே 4.
நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வள்ளி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியுமின்னும்
மிகையான பூத மவையும்.
அஞ்சிமும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.5
வாளரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடு முடனாய்.
நாம்மலர் வன்னி கொன்றை நதிகுடிவந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரியுழு வையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.6
செப்பிள முலைநன் மங்கை யொருபாகமாக
விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையானபித்தும்
வினையான வந்து தலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே 7.
வேள்பட விழிசெய் தன்று விடைமேலிருந்து
மடவாள் தனோடு முடனாய்
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.8
Read also - ஸ்ரீ ஆதித்யஹ்ருதய ஸ்லோகம் | ADITHIYA HIRUDHAYAM LYRICS IN TAMIL PDF
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன்
சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.9
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கி
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியுநாகம் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.10
தேனமர் பொழில் கொளாலை விளைசெந் நெல்துன்னி
வளர் செம்பொன் எங்கு(ம்) திகழ
நான்முக னாதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொன் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.11
0 Comments