விஷ்ணுபதி புண்ணிய காலம்
VISHUPATHI PUNNIYAKALAM |
வழிபாட்டு நேரம் 2023:-
- 13.02.2024, செவ்வாய்கிழமை (அதிகாலை 1 :30 மணி முதல் காலை 10 :30 மணி வரை)
- 14.05.2024 செவ்வாய்கிழமை
- 17.08.2024, சனிக்கிழமை
- 16.11.2024, சனிக்கிழமை.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரமாகும். இந்த அவதாரத்தை எடுத்த நோக்கம் நிறைவேறிய பின்னரும் கூட நரசிம்மரின் கோபம் குறையவில்லை. அந்த கோபத்தை சமாளிக்க இயலாத அனைத்துத் தேவர்களும், முனிவர்களும், மகாலட்சுமியைச் சரணடைந்து நரசிம்மரின் உக்ரத்தைத் தணிக்க வேண்டினார்கள்.விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை மேற்கொள்வது,பல ஏகாதசி விரதங்களை மேற்கொள்வதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.
Also Read Shri Marghabhandhu Sthothiram
மகாலட்சுமியும் அவர்களது வேண்டுகோளை ஏற்று, உக்ர நரசிம்மர் அருகில் சென்றாள். அவளது நிழல் நரசிம்மர் மீது பட்டவுடன், நரசிம்மரும், மகாலட்சுமியும் இணைந்து, சாந்த சொரூபமான லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தனர். அவ்வாறு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மகாவிஷ்ணு, காட்சி கொடுத்த புனித நேரமே ‘விஷ்ணுபதி புண்ணிய காலம்’ என்றும் சான்றோர்கள் எடுத்துரைக்கின்றனர்.
இந்த புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் பெருமாள் ஆலயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். ஒரு தடவை விஷ்ணுபதி புண்ணிய கால விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், பல ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்த பலனை பெறுகிறார்கள் என சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஒரு வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வரக்கூடிய விஷ்ணுபதி புண்ணிய காலமான வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாத ஆரம்ப நாளில் எப்பொருட்குமிறைவனான மகாவிஷ்ணுவை அந்நாளில் அருகிலுள்ள தினசரி நித்ய பூஜைகள் நடைபெறும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலுக்குச் சென்று வெண்ணிற 27 மலர்களை கைகளில் ஏந்தி பிரகாரத்தை 27 முறை பிரதட்சிணம் வரும்போழுது ஒவ்வொரு முறையும் தங்கள் கோரிக்கைகளை மனதில் எண்ணி ஒவ்வொரு மலராக கொடிமரம் முன்பு வைத்து வலம் வரவேண்டும்.
விஷ்ணுபதி புண்ணிய காலம் பூஜை சோபகிருது ஆண்டு வைகாசி 1ம் தேதி 15-05-2023 திங்கட்கிழமை. மதுரை- அழகர் கோவில் சாலையில் காதகிணறு கடச்சநேந்தல் அருகில் நடனகோபால்சுவாமிகள் திருக்கோவிலில் நடைபெற உள்ளது ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கோவிந்த ராஜ பெருமாள் சன்னதியில் இடியாப்ப சித்தரின் ஈடுஇல்லா சீடரும் அங்காளபரமேஸ்வரி அடிமை ஸ்ரீகுருமங்களகந்தர்வா ஸ்ரீல ஸ்ரீவெங்கடராம சித்தர் கருணையால்பூமியில் விடுபட்ட விஷ்ணுபதி புண்ணிய காலம் பூஜைகளை மீண்டும் புணர் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது காலை 6 மணி முதல் 11மணிக்குள்நடைபெறும் கோமாதா, ஆடு(வாஸ்து) பரி(குதிரை ) சப்த மாதர்கள் பூஜை மிக சிறப்பாக நடைபெறும்.
விஷ்ணுபதி பூஜை முறை:-
27 முறை பிரதட்சிணம் வந்த பிறகு கொடிமர நமஸ்காரம் செய்து கருடாழ்வாரை வணங்கி மஹாலக்ஷ்மி தாயாரையும் மகாவிஷ்ணுவையும் மனமுருகி தரிசித்து பிரார்த்தனை செய்து தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வேண்டிவர வேண்டும். இறை சக்தியால் அடுத்து வரக்கூடிய மூன்று விஷ்ணுபதி புண்ணிய பூஜைகளில் கலந்து தங்களது கோரிக்கைகளை வேண்டிவர புண்ணிய காலம் பூர்த்தி அடைவதற்குள்ளாக பக்தர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
Also Read Krishna Ashtakam
இந்த நாளில் இல்லங்களில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், மகாலட்சுமி பூஜை, கோ பூஜை, கோவிற்கு தானம், ஆகியன செய்வதும் மிகவும் சுபபலன் நல்கும்.
ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகாலம் பூஜை பயன்கள்
இப்பூஜைகளை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாதாயமான தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்புமிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன மற்றும் அக வளர்ச்சி, ஆனந்தம், ஆன்மிக முன்னேற்றம், மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தரவல்லது விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். இக்காலம் ஜோதிட ரீதியாக சூரியனின் ஸ்திர ராசியில் சஞ்சார காலமாகவும் அமைகிறது. இக்காலத்தில் கிட்டும் பலன்கள் ஸ்திரமாக்கும். எனவே இப்புண்ணிய காலத்தில் வழிபாடு செய்து ஸ்ரீலக்ஷ்மிநாராயணனின் பரிபூரண அருளைப் பெறுவோமாக.
Also read :Mahavishnu thuthi padagal
விஷ்ணுவை வணங்க தீராத பிரச்சினை தீரும் சித்திரை முடிந்து வைகாசி பிறக்க போகி றது இது விஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.
வைகாசி மாதம் விஷ்ணுபதி புண்ணிய காலம் பிறக்கப் போகிறது. இது ஏகாதசி க்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ் ணு வையும் தாயாரையு ம் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும்.
தமிழ் மாதங்கள் 12ல்
சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. பிரம்மாவுக்கு ரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும்
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய வை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. விஷ்ணு வுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணு பதி புண்ய காலம்.
ஆனி, புரட்டாசி, மார்கழி,பங்குனி ஆகிய வை சிவனுக்குரியவை. சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண் ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும்.
வைகாசி மாத விஷ்ணுபதி புண்ணிய கால த்தின் போது உங்களின் பிரச்சினை களை வே ண்டுதல்களை மனமுருகி மகா விஷ்ணுவிடம் சொல்லுங்கள். தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவ டைவதற்குள் நிறைவேறும். இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது.
விஷ்ணுபதி விரதம்:-
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த தாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தரும்.
ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பல னைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகா லம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங் கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.
மகாவிஷ்ணுவிடம் வேண்டுதல்
இந்த புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ் ணு வையும், மஹாலக்ஷ்மியையும் ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவி ன்றி செய்யலாம். கோவி லுக்கு போக முடியா விட்டால் வீட்டி லேயே நாராயணனை மனதார நினைத்து நம் வேண்டுதலை கூறி வணங்கலாம்.
புண்ணிய காலத்தில் விரதம்:-
மன அமைதி மற்றும் மோட்சத்தை தரக்கூடி யது இந்த புண்ய காலம். இந்த புண்ணி ய காலத்தில் விரதம் இருப்பவர்களுக்கு அந்த மகாலட்சுமியின் அருளும் ஸ்ரீமன் நாராயண னின் அருள் நிச்சயம் கிடைக் கும். ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத் தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
விஷ்ணுபதி பூஜை முறைகள் :-
விஷ்ணுபதி புண்யகால தினத்தில் செய்யப் படுகின்ற பூஜைகளுக்கு பன்மடங்கு பலன்கள் உண்டு.
ஆராதனை, விதவிதமான அபிஷேகங்கள் திருமஞ்சனம்,
புது வஸ்திரங்கள்
ஆபர ணங்கள் சார்த்துதல்..
தானதர்மங்கள் அன்னம் ஆடை மஞ்சள் சரடு வளையல் போன்ற மங்களப் பொருட்கள், காலணிகள், நீர்மோர், பானகம் , பால் போன்றவை கொடுக்கலாம்.
பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள்..
ஜாதி, மத பேதமின்றி 60 / 70 / 80 வயது நிரம்பிய தம்பதியர்கட்குப் பாதபூஜை.
ஹோமம், வடமொழி தமிழ் மொழி வேத பாராயணம், நாம் சங்கீர்த்தனம், பஜனை.
ஆலயம் முழுதும் அரிசிமாவுக் கோலம் போட்டு, அகல் தீபங்கள்/ விளக்குகள் ஏற்றுதல் .
அனைவரும் இவ்வரிய தெய்வீக வாய்ப்பினை தவறவிடாது. புனித விஷ்ணுபதிப் புண்யகால மஹிமையை எங்கும் பறை சாற்றி மேற்கண்ட முறையில் வழிபாடுகள், தானதர்மங்களைக் கடைப் பிடித்து லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெறுவோமாக.
கொடுமையான வாழ்க்கையா?
பெரும் நஷ்டம் கடனா? வழிபடுங்கள் விஷ்ணுபதி புண்ய காலத்தில்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை சக்தியை
சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!
விஷ்ணுபதி புண்யகாலம் தேதிகள் 2024:13 பிப்ரவரி 2024 செவ்வாய்14 மே 2024 செவ்வாய்,
16 ஆகஸ்ட் 2024 வெள்ளிக்கிழமை
16 நவம்பர் 2024 சனிக்கிழமை,
இதையும் படிக்கலாமே:-Hanuman-sahasranamam
ஓம் நமோ நாராயணாய..!.
0 Comments