கடன் நிவாரண ஸ்தோத்ரம் / Kadan Nivarana sthrothiram.

கடன் நிவாரண ஸ்தோத்ரம்

Download Now
kadan nivarana sthothiram
 Kadan Nivarana sthrothiram


 1. தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்!
     ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||

 2. லக்ஷ்மியாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம் |
     ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||

 3. ஆந்த்ரமாலாதரம் ஸங்க சக்ராப்ஜாயுத தாரிணம் |
     ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||

 4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜவிஷநாஸநம் | 
     ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே||

5. ஸிம்ஹநாதேந மஹதாதிக்தந்தி பயநாஸநம் | 
     ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||

 6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யே ஸ்வரவிதாரிணம் |
     ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||

 7. க்ரூரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் அபயப்பிரதம் | 
     ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||

 8. வேதவேதாந்த யஜ்ஞேஸம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம் | 
     ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே ||

 9. யலிதம் படதேநித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞிதம்|
     அந்ருணீ ஜாயதே ஸத்யோ தனம் எஸிக்ரமவாப்நுயாத்||
     அகோபில நிவாஸாய ப்ரக்காலத வரதாத்மனே | 
     மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய் மங்களம் || 
     ருணவிமோசன நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்

புதிர் நருஸிம்ஹர் நணே குணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோதரம் ஸம்பூர்ணம்.

விளக்கம்

  • தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
  • மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
  • ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
click here to read Shri Kubera Strothiram
  • நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
  • மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்க ஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்
  • பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்
  • உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்
  • வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்
  • யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார் பூமி நீளா சமேத ஸ்ரீல்க்ஷ்மி நரஸிம்ம ஸ்வாமினே நம:
Dhamodhara Astakam click here to see

 இந்த சுலோகம்மிகவும் சக்தி வாய்ந்த சுலோகம் இதைசெவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் சொல்லவும்.


Post a Comment

0 Comments