KARTHIKA PURANAM TAMIL CHAPTER 25

 

25வது அத்யாயம்

இவ்வாறு க்ருஷ்ணை, வேணி, கூர்மதி நதியின் பிரபாவத்தைக் கேட்டு சந்தோஷமடைந்து, பாமையானவன் பகவானைப் பார்த்து, நாதா! நான் இன்னொரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும். அதாவது, முன் தாங்கள் சொன்ன கலகியின் சவிஸ்தாரத்தைக் கேட்டும், அவளும் இவ்வாறே சகல விரதங்களையும் அனுஷ்டித்து மோக்ஷப் பிராப்தி அடைந்தாள் என்று கூறினீர்கள். அது உண்மையே ஆனால் ஒருவன் செய்யும் விரத தவ புண்யமானது செய்தவருக்கே சேருமா அல்லது அவர்களுடைய பந்துக்களையும் அடையுமா? என்று கேட்க...

CLICK HERE TO READ Mahashivaratri

கேளாய், சத்யபாமா! முதலாவது மாக விரதம், கார்த்திகை விரதம், ஏகாதசி விரதம் இம்முன்றும் எனக்கு ரொம்பவும் ப்ரியம் தவிர, விருக்ஷங்களில் துளசி, மாதங்களில் கார்த்திகை, திதிகளில் ஏகாதசி, க்ஷேத்ரங்களில் துவாரகை இவை நான்கும் எனக்கு அந்தயந்த பிரியம். இந்த நான்குவித சேவையானது எவனொருவன் அனுஷ்டித்து வருவானோ, அவன் யாகாதி க்ருத்யங்களைச் செய்த தவப்பயன் அடைந்து பாக்கியத்தைப் பெற்றவனுக்குச் சமானமாக இருந்து என் சாயுஜ்ய பதவியை அடைவான். அவனுக்கு புனர்ஜன்மா (மறுபிறவி) கிடையாது.

மேலும் ஒருவன் செய்யும் விரத மஹிமையானது. அவனவனுக்கு மட்டுமே பலன் தரும். இன்னும் தேசங்கள் என்ன, கிராமங்கள் என்ன குலமென்ன, இதுகளெல்லாம் சதுர்யுக பரியந்தம் வரை அவரவர்கள் செய்த பாப புண்யங்களை அவரவர்களே அடைவார்கள், அதாவது. கிருதயுகத்தில் ஒருவன் பாப புண்யம் செய்தால், அப்பாவ புண்யமானது அந்த தேசத்திற்கும், த்ரேதாயுகத்தில் செய்யும் பாப புண்யமானது அந்த கிராமத்திற்கும், துவாபர யுகத்தில் செய்யும் பாப புண்யமானது தம் குலத்திற்கும் ஏற்படும். கலியுகத்திலோ, தான் செய்யும் பாப புண்யமானது செய்தவனுக்கே சேரும். மேலும், இக்கலியுகத்தில் சதிபதிகள் (கணவன், மனைவி) காலம் தவறி போகம் பண்ணுவதாலும், புண்ணியம் செய்தவனின் பலத்தை பாபம் செய்தவனே அடைபவனாகிறான்.

 தவிர, ஒருவனுக்கு அத்யயனம் சொல்லிக் கொடுப்பதாலும் அல்லது அவனுக்கு உபாத்யாயம் செய்வதினாலும், அவன் சாக்ஷாத்காரத்தை அடைகிறான். மேலும், கலியுகத்தில் பாப ஹேதுவான காமாதி துரக்கிருத்தியங்கள் செய்து திரிகின்றவனும், பரஸ்திரீகளின் மேல் இச்சை கொண்டு அலைபவனும், மித (அதிக) போஜனம் செய்பவனும், நம்பிக்கை துரோகம் செய்பவனும், இவர்களெல்லாம் என்ன தான தருமம் செய்தாலும் ஆறிலொரு பங்குதான் அவர்களுக்கு கிட்டும். மேலும் ஸ்திரீகள் தங்கள் கற்பை பிறழாமல் நடக்கவேண்டியது முதல் கடமையாகும். முதலாவது (பஹிஷ்டை காலம்) அதாவது, பெண்கள் வீட்டில் விலக்காக இருந்தால், நான்கு நாள் வரைக்கும புருஷர்கள் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் இருக்கவேண்டிய அந்த நான்காவது நாளில் மங்கள ஸ்னானம் செய்து, பின் ஐந்தாவது நாளாகிய சுதினத்தில் சுத்த ஸ்னானமாடி, தேவபூஜை முதலானது முடித்து பதியை ப்ரதக்ஷிணமாக வந்து நமஸ்கரித்து, பிறகு வாழ்க்கைக்குரிய கடமைகளை கவனிக்க வேண்டும்.

CLICK HERE TO READ Dhyana-slokas-in-tamil

 மேலும், அன்று தன் பர்த்தா உண்டுகளித்த சேஷ அன்னத்தை அன்புடன் பருகவேண்டியது ஸ்த்ரீகளின் தருமம். அவ்வாறு நடந்து வரும் ஸ்திரீகள், அஷ்டலக்ஷ்மிகளில் ஒருவளுக்குத் தோழியாக வந்தடைவாள். தவிர, பெண்கள் காலையில் எழுந்ததும் கிரஹசுத்தி செய்து, தந்ததாவனம், ஸ்னானபானம் பதிபூஜை முதலான கடமைகள் முறையே செய்துவரும் ஸ்திரீகள், லக்ஷக்ஷ்மீதேவிக்கு பாத்யதை உடையவளாகிறார்கள். கேளாய்,பாமா! இன்னும் கொஞ்சம் சொல்லுகின்றேன். இன்னும் ஸமஸ்த ஜீவராசிகளெல்லாம், ஒவ்வொரு ஸ்திர் புருஷர்கள் செய்யும் பாப புண்யங்கள் அனைத்தையும் கேட்டு நற்கதிக்குப் பாத்திரமாகின்றன. எவன் ஒருவன் இன்னொருவருடைய பணத்தை அபகரித்தவன் தானதருமம் செய்கிறானோ, அந்த தானதருமமெல்லாம் நிஷ்பலமால் ரௌரவாதி நரகத்தை அடைவான்.

 மேலும், கடன் வாங்கிச் செய்யும் யாகமோ, தவமோ, ப்ரதிஷ்டையோ இவைகளெல்லாம் ஸம்பூர்ணபலம் கொடுக்காது. தவிர, ஸ்திரீயானவள் தன் நாயகருக்கு மனம் கோணாமல் நடத்து அவருக்கு ஸந்தோஷத்தை உண்டுபண்ணும் உத்தமிகளுக்கு, தன் பர்த்தா செய்யும் புண்யங்களில் பாதி புண்யத்தை இவள் அடைகிறாள். ஆகையால், உலகத்திற்கே உத்தமமாய் விளங்கும் இக் கார்த்தீக மஹாத்மியத்தை, ச்ரவணம் செய்கிறவர்கள் அல்லது கேட்டு அதன்படி நடக்கிறவர்கள், என் பதவியை வந்தடைவார்கள் என்று கிருஷ்ண பரமாத்மா பாமையிடம் கூறி முடித்தார்.


 25வது அத்யாயம் முற்றிற்று.

Post a Comment

0 Comments