ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல் pdf / Sri Lalitha Navarathna Malai Lyrics Tamil

Download Now

 ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை lyrics

LALITHA NAVARATHNA MALAI
LALITHA NAVARATHNA MALAI

ஞான கணேசா சரணம் சரணம் 
ஞான ஸ்கந்தா சரணம் சரணம் 
ஞான ஸத்குரு சரணம் சரணம் 
ஞானானந்தா சரணம் சரணம்

 காப்பு

ஆக்கும் தொழில்ஐந் தரனாற் றநலம் 
பூக்கும் நகையாள் புவனேஸ் வரிபால்
சேர்க்கும் நவரத் தினமா லையினைக் 
காக்கும் கணநா யகவா ரணமே! 

 1.வைரம்

கற்றும் தெளியார் காடேகதியாய் 
கண்மூடி நெடுங் கணவான தவம் 
பெற்றும் தெரியார் நினையென் னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ 
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே 
வற்றாத அருட்சுனையே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 

2. நீலம்

மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம் 
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம் 
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய் 

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 3.முத்து

முத்தே வரும்முத் தொழிலாற் றிடவே
முன்னின் றருளும் முதல்வீ  சரணம் 
வித்தே விளைவே சரணம் சரணம் 
வேதாந் தநிவா சினியே சரணம் 
தத்தே றியநான் தனயன் தாய் நீ 
சாகா தவரம் தரவே வருவாய்
மத்தே றுதத்திக் கிணைவாழ் வுடையேன்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

SHRI KOTHA SUTHI

 4.பவளம்

அந்தி மயங்கிய வானவி தானம் 
அன்னை நடனம் செய்யும் ஆனந்தமேடை
சிந்தை நிம் பவளம் பொழிபாரோர் 
தேம்பொழி லாமிது செய்தவ ளாரோ
எந்தயிடத்தும் மனத்துள் இருப்பாள் 
எண்ணு பவர்கருள் எண்ணமி குந்தாள் 
மந்திர வேதமய பொரு ளானாள். 

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

5. மாணிக்கம் 

காணக் கிடையாக் கதியா னவளே
கருதக் கிடையாக் கலையா னவளே
பூணக் கிடையாப் பொலிவா னவளே
புனையக் கிடையாப் புதுமைத் தவளே
நாணித் திருநா மமும்நின் துதியும் 
நவிலா தவரை  நாடா தவளே 
மாணிக் கஒளிக் கதிரே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 6. மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம் 
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் 
சுருதிஜதி லயமே இசையே சரணம் 
அரஹர சிவஎன் றடியவர் குழும 
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 7. கோமேதகம்

பூமே வியநான் புரியும் செயல்கள் 
பொன்றாப் பயனும் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜயசக் திஎனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமே தகமே குளிர்வான் நிலவே 
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர்கோ கிலமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 8. பத்மராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராகவி காஸவி யாபினி அம்பா
சஞ்சல ரோகநி வாரணி வாணீ 
சாம்பவி சந்த்ரக லாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி 
அம்ருத ஸ்வரூபிணி நித்திய கல்யாணி
மஞ்சுள மேரு ச்ருங்க நிவாஸினி

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 9. வைடூரியம் 

வலையொத் தவினை கலையொத்த மனம்
மருளப் பறையா றொலியொத் தவிதால் 
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலைவற் றசைவற் றநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா)

நவரத்தின மாலை பயன்கள்:-

ஸ்ரீ லலிதாம்பிகையைப் போற்றித் துதிக்கும் அற்புதப் பாடல்களுள் ஒன்று ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல்.நவரத்தினங்களான, வைரம், நீலம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், பத்மராகம் (புஷ்பராகம்), வைடூரியம் முதலியவற்றைக் குறிக்கும் சொற்களின் மூலம் அம்பிகையைத் துதிப்பதாக அமைந்துள்ள பாடல்.எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்ன மாலை நவின்றிடுவார் அவர் அற்புத சக்தி எலாம் அடைவார் சிவரத்தினமாய் திகழ்வாரவரே.

LALITHA THRISATHI PADAL

LALITHA SAHARSARANAMMAM

Post a Comment

0 Comments