27 nakshatra mantras in tamil pdf

நட்சத்திர ஸ்லோகங்கள் 

Download Now
27 நட்சத்திரங்கள் pdf
27 நட்சத்திரங்கள் pdf

கார்த்தீக புராணம் தமிழில் காண

நாம் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில்
இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை

  • சந்திரன் எந்த ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருப்பார். 
  • அதுவே நாம் பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் என்கிறோம். 
  • பிறந்த நட்சத்திரம் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் நம் உடலை இயக்குபவர். 
  • கர்ம வினைகளுக்கேற்ப நம் உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதி ஆவார்கள்.
  • குறிப்பாக ஆலய வழிபாட்டிற்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். 
  • அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக்கொள்ள முடியும்.
  • ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள்தான் அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்களாகும்.
  • ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்தவொரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்சத்தின் ரகசியம். 
  • ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இதுதான்.
  • எனவே, ஜென்ம நட்சத்திர வழிபாட்டு வாய்ப்பை ஒரு போதும் தவறவிட்டு விடாதீர்கள். 
  • குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். 
உங்கள் ஜாதகத்தின் மூலம் (தீமைகள் அகல, தோஷம் விலக) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்துக்கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பலன்கள் :

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு உங்களால் முடிந்த தானங்கள் செய்தால், பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. 

தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திர தினத்தன்று அவரவர் தகுதிக்கேற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது அல்லது 
பணம் இல்லாத பட்சத்தில் கவலைப்பட வேண்டாம் உடலால் கோவிலுக்கு உபகாரம் செய்வது மிகவும் நல்லது. 

வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம் செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். 

ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி குல தெய்வ ஆலயத்திற்கு அல்லது உங்கள் இஷ்ட தெய்வ ஆலயத்திற்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்வதால் நம் கஷ்டங்கள் ஓரளவு குறைந்து நல்லதே நடக்கும்.. 

மற்றும் ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.

அப்படி செல்ல முடியாத பட்சத்தில் பசுவைப் பார்த்தால் மாட்டிற்கு அருகம்புல் கொடுத்து ஒரு நமஸ்காரம் செய்யுங்கள் போதும்.

அதுவே சகல தெய்வங்களையும் வணங்கியதற்குச் சமம்.


1.அஸ்வினி

சுமநஸ வந்தித தேவ மனோகரி 
அஸ்வினி தேவ சஹாய க்ரூபே . 

2.பரணி

க்ஷர ஸமுத்பவ திவ்யரூபிணி 
பரணி தேவி சஹாய க்ருபே . 

3. கிருத்திகை

பங்கஜவாஸினி பாப விமோசனி 
க்ருத்திகா தேவி சஹாய க்ருபே . 

4. ரோகிணி

மோக்ஷப்ரதாயினி மஞ்சுள பாஷிணி 
ரோகிணி தேவி சஹாய க்ருபே .

 5. ம்ருக சீர்ஷ

மந்த்ர நிவாஸினி சந்திர பத்தினி 
ம்ருக சீர்ஷ தேவி சஹாய க்ருபே . 

6. திருவாதிரை

தேவஸ்பூகித ஸத்குண வர்ஷிணி 
திருவாதிரை தேவி சஹாய க்ருபே . 

7.புனர்பூசம்

அம்புஜவாஸினி தேவகண ஸேவித 
புனர்பூசதேவி சஹாய க்ருபே . 

8.பூசம்

ஜெயவர வர்ணிநி ஜெயப்பிரதாயிணி 
சிவபூச தேவி சஹாய க்ருபே . 

9. ஆயில்யம்

சீக்ர பலப்ரத பவபய ஹாரிணி சுப 
ஆயில்யதேவி சஹாய க்ருபே .

10. மகம்

சாது ஜடாச்ரித தேவமுனி பூஜித யோக 
மகம் தேவி சஹாய க்ருபே . 

11. பூரம்

துர்கதி நாசினி தூபப் ப்ரகாசினி 
ஜெயபூரம் தேவி சஹாய க்ருபே

12.உத்திரம்

ஞானமய மோகினி சாஸ்த்ர ஸ்வரூபிணி 
உத்திரதேவி சஹாய க்ருபே . 

13. ஹஸ்தம்

ஹனஹர சஹாய ஆனந்த பூகிதலாப 
ஹஸ்த தேவி சஹாய க்ருபே .

14.சித்திரை

ரதகஜ துரக பதாதி சேவக சாஸ்திர 
மயசித்ரா கேலிமா

15.சுவாதி 

சக்ரிணி ராக விவர்தினி ஞானமய 
சுவாதி தேவி சஹாய க்ருபே . 

16.விசாகம்

குங்கும அர்ச்சித அநுதின ஸேவித 
விசாக தேவி சஹாய க்குபே . 

17.அனுஷம்

சந்த்ரப்ரகாசினி கந்தர்வ கானமய 
அனுஷாதேவி சஹாய க்ருபே .

18. கேட்டை

பாரதி பார்கவி மந்த்ரமய கோபுர 
கேட்டை தேவி சஹாய க்ருபே . 

19. மூலம்

சங்கர தேசிக சாந்த பூரண 
அன்னமூல தேவி சஹாய க்குபே ,

20. பூராடம்

அனுதின ஸேவித அச்சுத வரப்பிரஸாத 
பூராட தேவி சஹாய க்குபே . 

21 , உத்திராடம்

சோக விநாசினி ரத்னாலங்கார 
உத்திராடதேவி சஹாய க்ருபே . 

22. திருவோணம்

மணிமயபூகித சாந்த சொரூபிணி 
திருவோண தேவி சஹாய க்ருபே . 

23. அவிட்டம்

காவிரி கங்கா நதிரல் ஸேவித காந்த 
அவிட்ட தேவி சஹாய க்ருபே .

 24. சதயம்

மூலிக ஸேவித முனிப்ரஸாத 
சதயதேவி சஹாய க்ருபே . 

25. பூரட்டாதி

நவநிதி - தாயினி நம : சிவாயினி 
பூரட்டாதி தேவி சஹாய க்ருபே . 

26. உத்திரட்டாதி

சங்க பதும நிதி சஹாய ரட்ஷக 
உத்திரட்டாதி தேவி சஹாய க்ருபே .

 27. ரேவதி

ஸ்வர்ணப்பிரதாயினி சூட்சும சஹாயினி 
ரேவதி தேவி சஹாய க்ருபே.

27 நட்சத்திர ஸ்லோகங்கள் பாராயணம் செய்யும் காலம்?

இந்த 27 நட்சத்திர ஸ்லோகங்களில் அவரவர் நட்சத்திரத்திற்குரிய ஸ்லோகங்களை தினமும் காலை 21 முறை பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் நன்மை கிடைக்கும் .

27 நட்சத்திரங்களுக்கு உகந்த பைரவரும் அவர் கோவில் கொண்டுள்ள ஸ்தலங்களும் 

  1. அஸ்வினி: ஸ்ரீ ஞான பைரவர் - கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.
  2. பரணி : ஸ்ரீமகா பைரவர் - திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.
  3. கார்த்திகை : ஸ்ரீ சொர்ண பைரவர் - திருவண்ணாமலை.
  4. ரோகிணி: ஸ்ரீகால பைரவர் -பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.
  5. மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர் - சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)
  6. திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர் - ஆண்டாள் கோவில் (பாண்டிச் சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)
  7. புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர் -பழனி சாதுசுவாமிகள் மடாலயம்.
  8. பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர் - (திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.
  9. ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர் - காளஹஸ்தி.
  10. மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர் -வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.
  11. பூரம் : ஸ்ரீ கோட்டை பைரவர்- பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.
  12. உத்திரம் : ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்- சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.
  13. அஸ்தம் : ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.
  14. சித்திரை : ஸ்ரீ சக்கர பைரவர் - தர்மபுரி- மல்லிகார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.
  15. சுவாதி : ஸ்ரீ ஜடா முனி பைரவர் - புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
  16. விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர் - திருமயம்.
  17. அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர் -  கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.
  18. கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர் - சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.
  19. மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர் - சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.
  20. பூராடம்: ஸ்ரீகால பைரவர் - அவிநாசி - அவிநாசியப்பர் கோவில்.
  21. உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர் - கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.
  22. திருவோணம்: திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர் - வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.
  23. அவிட்டம்: சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி .
  24. சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர் - சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.
  25. பூரட்டாதி: கோட்டை பைரவர் - ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.
  26. உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர் - சேங்கனூர் - சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
  27. ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர் - தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்

Post a Comment

1 Comments