அந்தாதியின் பொருள் / அந்தாதி என்றால் என்ன?
ஸ்ரீ மீனாட்சி அந்தாதி
![]() |
Sree Meenakshi Anthathi lyrics in tamil pdf download |
To Download this ஸ்ரீ மீனாட்சி அந்தாதி தமிழில் pdf click here
காப்பு
நேரிசை வெண்பா
சேராத செல்வமெலாஞ் சேர்க்கும் திருவ னைய
ஆராத இன்பம் அருள்புரியும்
- தீராத
பொய்த் திரளாம் துன்ப னைத்தும் போக்கும்
புகழ்கூடல்
சித்தி விநாயகனைச் சேர் !
நூல்
நேரிசை வெண்பா
1.அணிசேர் மதுரையுறை அம்மைமீனாட்சி !
பணிசேரும் சுந்தரனார் பன்னீர்
- தனியா
வினைசேரும் ஈனர் விளைக்குமிடர் தீர்த்தாள்
உனைச்
சேர்ந்தார்க் கேதுகுறை யோது .
2. ஓதுந் தமிழ்ப்பரிவால் உன்னடியைப் போற்றுகின்றேன்
தீதும்
நலமும்நின் சேடிவக்கே - ஏதுமிலேன்
நண்ணார் புரியும் நலிவகற்றி
யாண்டருள்செய்
தண்ணார்மீனாட்சி ! சரண்
3. சரணடைந்தார் தம்மையிட்டர் சாராமல் காப்பாய்
கரணமெலாம் நின்வசமே
கண்டாய் - தருணமதில்
நாயே யனையார்செய் தீங்தனைத்
தீர்த்தருள்செய்
தாயேமீனாட்சிநலந் தா .
4. தாவென்று மற்றோர்பால் சாரேன் நினைச்சார்ந்தேன்
ஓவென்று நானழுதல்
ஒண்ணுமோ - பாவொன்றும்
கூடல் மதுரையிறை கூடுமீனாட்சியே
ஆடலர
சுக்கரசி யாள் .
5. ஆளாது நீயிருந்தால் ஆர்துணைவர் ? நாயேன் சொல்
கேளா திருப்பதுநற்
கேண்மையோ ? - வாளா
இருத்தல் கருணைக் கிழுக்கன்றோ ? கூடல்
திருத்தமீ
னாட்சியே செப்பு
6. செப்புங் குறைகளெலாம் தீரும் நினைக்கண்டால்
ஒப்புவமை யில்லா
உமையவளே ! - பொய்ப்புல்லர்
செய்யும் இடர்களையாய் தேவிமீ னாட்சியே
!
எய்யும்வகைச் செய்யேல் இனி .
7. இனித்த மதுரமொழி எங்கள் மீனாட்சியே
பனித்த சடைமுடியோன் பங்கில் -
தனித்துறையும்
அம்மையே ! ஞானத்தின் ஆரணங்கே ! ஈனர்செய்
வெம்மைதீர்த்
தோர்சொல் விளம்பு
8. விளம்பும் மறைபோற்றும் மீனாட்சி யம்மே !
உளம்புண்ணாய் நாயேன்
உலைந்தேன் - இளம்புதல்வன்
துன்பங் களைந்தருள்வாய் தூயசிற் சக்தியே
!
இன்பவடி வாம் அன்னையே !
9. அன்னை யெனவுன்னை அடைந்தேன் அறிவில்லார்
என்னையிடர் செய்கின்றார்
என்செய்தேன் ? முன்னைவினை
தீர்த்தாள் திருக்கூடல் தேவிமீனாட்சி !
கண்
பார்த்தாள்வந் தேன்நின் பதம் .
10. பதமலரைச் சேர்ந்தென் பாவைமீ னாட்சி !
நிதமுனது தாளை நினைந்தேன்
- இதமில்
கொடியார் புரியமிடர்க் கோதகற்றி நின்தாள்
அடியேன்
தலைமீ தணி .
0 Comments