12 JYOTHIRLINGA NAMAVALI AND PLACE LIST IN TAMIL

ஜோதிர்லிங்கம் என்றால் என்ன?

12 ஜோதிலிங்கம்,அமைந்துள்ள இடங்களும்
12 ஜோதிலிங்கம்

பரமசிவன் ஆதியும் அவரே அந்தமும் அவரே,லிங்கத்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். ஜோதி லிங்கம் என்பது சிவனை ஜோதிலிங்க வடிவில் வழிபடுவதாகும். ஜோதிர்லிங்கம் என்றால் என்ன? எல்லாம் வல்ல சிவனை லிங்க வடிவில் தரிசனம் தருவது, அதாவது ஜோதி என்றால் ஒளி லிங்கம் என்றால் சிவனின் மறு உருவம். ஜோதிலிங்கம் என்றால் சிவன் லிங்க வடிவில் ஒளிமிகுந்த காட்சி அளிக்கும் திருத்தலம் ஆகும்.

ஜோதிர் லிங்கத்தின் புராணக்கதை:

சிவனுடைய ஜோதி லிங்கத்தைப் பற்றி சிவபுராணத்தில் காணலாம். ஜோதிலிங்கம் உருவான கதை. முன்பொரு காலத்தில் விஷ்ணுவும் பிரம்மாவும் யார் உச்ச சக்தி பெற்றவர்கள் என்று விவாதிக்கும் பொழுது இதன் தீர்வாக சிவனிடம் முறையிடும் போது சிவன் ஒளி வடிவாக உருமாறி தன்னுடைய முடிவை கண்டறியுமாறு இருவரிடம் கேட்டுக்கொண்டார், விஷ்ணு முயற்சித்து அதில் தோல்வியடைந்து ஆதி என்பதை உணர்ந்து கொண்டனர், ஆனால் பிரம்மா அதனை உணராமல் தான் முடியை கண்டதாக பொய் உரைத்தார் அதன் விளைவாக தனது 5வது சிரத்தை இழந்தார்.அந்த முடிவில்லாத வெளிச்சமாய் உருவானதுதான் இந்தப் பன்னிரண்டு ஜோதி லிங்கங்கள்.

12 ஜோதிர் லிங்கங்களும் , அவை அமைந்துள்ள இடங்களும்:

மொத்தம் 64 ஜோதி லிங்கங்கள் உள்ளன அவற்றில் 12 மிகவும் புனிதமானவை அதிக சக்தி வாய்ந்த நம்பப்படுகின்றன அவை இவை அனைத்தும் இந்தியாவில் இருக்கின்றன. மற்ற லிங்கங்கள் இருந்து ஜோதிடத்திற்கு பெரிதாக வித்தியாசம் இல்லை ஆனால் ஒருவன் தனது தூய்மையான ஆத்ம நிலையை அடையும் போது லிங்கத்தில் இருந்து ஒளி வெளிப்படுவதை காணலாம் என்று பலரும் நம்புகின்றனர்.லிங்கத்திற்கும் ஒவ்வொரு சக்தி உள்ளதாக நம்பப்படுகின்றன.

  1. சோம்நாத் ஜோதிலிங்கம், கீர், குஜராத்
  2. மல்லிகார்ஜுனா ஜோதிலிங்கம், ஸ்ரீசைலம் ,ஆந்திர பிரதேஷ்
  3. மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்கம், உஜ்ஜெயின், மத்திய பிரதேஷ்
  4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க, காந்தா ,மத்திய பிரதேஷ்
  5. வைத்தியநாத ஜோதி லிங்கா, தேவ்கர், ஜார்க்கண்ட்
  6. பிஸ்மி சங்கர ஜோதிலிங்க, மகாராஷ்டிரா
  7. ராமநாதசுவாமி ஜோதிலிங்க, ரமேஷ்வரம், தமிழ்நாடு
  8. நாகேஸ்வர ஜோதிலிங்கம், துவாரகா, குஜராத்
  9. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம், வாரணாசி ,உத்தர பிரதேசம்
  10.  திரிம்பகேஸ்வரர் கோயில் ,நாசிக், மகாராஷ்டிரா
  11. கேதார்நாத் ஜோதிலிங்க, ருத்ரபிரயாக், உத்தரகாண்ட்
  12. கிரீன் ஈஸ்வர் ஜோதிலிங்கம், அவுரங்கபாத், மகாராஷ்டிரா.
12 ஜோதிர்லிங்க நாமாவளி
12 ஜோதிர்லிங்க நாமாவளி

12 ஜோதிர்லிங்க நாமாவளி:

சௌராஷ்ட்ரே , சோமநாதம்ச 
ஸ்ரீசைலே , மல்லிகார்ஜீனம் 
உஜ்ஜைய்னம் , மஹாகாளம் 
ஓம்காரம் , மமலேஸ்வரம்
பைஜல்யாம் , வைத்யநாதம்ச 
டாகின்யம் , பீமசங்கரம்
சேதுபந்தேது , ராமேஸ்ம் 
நாகேஸம் , தாருகாவணே 
வாரணம்சம்து , விஸ்வேஸம் 
திரியம்பகம் , கௌதுமீதட் 
ஹிமாலேயேது , கேதாரம் 
ஸ்ருட்டிஸ்ட்ட , சிவாலயே 
ஏகானி ஜோதிர்லிங்காணி 
சாயாம் ப்ராப்தம் படேன் நரஹ 
சப்த ஜன்மாக்ருதம் பாபம் 
ஸமரணேன விநயஸ்யதி !

Post a Comment

0 Comments