Vel Maaral Lyrics in Tamil | VEL MAARAL MAHAANTHIRAM | வேல் மாறல் பாராயணம்| வேல்மாறல் மஹா மந்திரம்

VEL MAARAL MAHA ANTHIRAM
VEL MAARAL MAHA MANTHIRAM

வேல்மாறல் மஹா மந்திரம் பாராயணம்

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம்
. வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்' என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல. நம் உட்பகையையும் அழிக்கும்.

முருகனின் வேலானது படைத்தல், காத்தல், அழித்தல். மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்யும் ஆற்றல் உடையது. பிரகாசத்தால் கதிரவன், கருணையால் குளிர்ந்த சந்திரன், பகைவர்களை அழிப்பதால் யமன், எளிதாக மிக நீண்ட தூரம் போய் உடனே மீண்டு வருவதால் மனம்... என வேலின் பெருமைகளைப் போற்றுகிறார் திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள். வீரக் கருணையையும் ஈரக் கருணையயும் உடையது வேல். ஆக்குவதும், அழிப்பதுவும், அளிப்பதுவும் வேலே!

அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி வருமாறு அமைத்து வேல்மாறல் எனும் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். முருகனடியார்கள். 
இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட சகல சௌபாக்கியங்களும் கை கூடும். சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும்.தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்: சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல. மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும்.

வேல்மாறல் பாராயணம் செய்யும் முறை

  • முதலில் குல தெய்வ வழிபாடு செய்து கொள்ளவும்.
  • பிறகு விநாயகரைத் துதி செய்து வழிபடவும்.
  • அடுத்து குரு வணக்கம் செய்யவும்
  • பிறகு சிவஸ்துதி வேல், மயில் வணக்கம் (ஆறு முறை) ஓதி, 
  • வேலினையும், மயிலினையும் போற்றும் கந்தர் அலங்காரப் பாடலைப் பாடி முடித்து
  • அதற்குப் பிறகே வேல்மாறல் மஹா மந்திரத்தை மனம் ஒருமித்து பாராயணம் செய்யவேண்டும். 
வெற்றி நிச்சயம். நினைத்த காரியம் கைகூடும்!!!

இதில் 'திருத்தணியில்' என்ற அடி, முதலில் 20 முறையும், இறுதியில் 20 முறையும்,
 64 அடிகளுக்கு இடையில் 64 முறையும்
அடிகள் 23,83,89,141 ஆக 4 முறையும் ஆக மொத்தம் 108 முறை வருமாறு பாராயண மந்திரமாக அமைந்துள்ளது.

விநாயகர் துதி
 திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை.

குரு துதி

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; 
குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

சிவ க்தி

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
வேல்மாறல் மஹா மந்திரம்
VEL MARRAL

 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

வேலும் மயிலும் சேவலும் துணை (ஆறு முறை ஓதவும்)

கந்தர் அலங்காரம் - 70வது பாடல்

விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் 
மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணை 
முருகா எனும் நாமங்கள் முன்புசெய்த 
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் 
பயந்ததனி வழிக்குத் துணை
வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

கந்தர் அலங்காரம் - 96வது பாடல்

தடக்கொற்ற வேள் மயிலே இடர்தீரத் தனிவிடில் நீ 
வடக்கில் கிரிக்கு அப்புறத்து நின்தோகையின் வட்டம் இட்டுக் 
கடலுக்கு அப்புறத்தும் கதிர்க்கு அப்புறத்தும் கனகசக்ரத் 
திடர்க்கு அப்புறத்தும் திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே.

வேல்மாறல் மஹா மந்திரம்


திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே |1||


பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை 
கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி 
விழிக்குநிகர் ஆகும்.|2||

சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை 
அடுத்தபகை அறுத்(து)எறிய உறுக்கிஎழும்
அறத்தை நிலை காணும்.|3||

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி 
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை 
கழற்குநிகர் ஆகும்|4||

பனைக்கைமுக படக்கரட மதத்தவ
கஜக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை 
தெறிக்க வரம் ஆகும். |5||

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு 
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி 
விழித்தலற மோதும். |6||

துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்க இடர் 
நினைக்கின் அவர் குலத்தைமுதல் 
அறக்களையும் எனக்கொர்துணை ஆகும் |7||

தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவ
அழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை 
விதிர்க்க வளை வாகும்.|8||

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு 
கவிப்புலவன் இசைக்குருகி வரக்குகையை 
இடித்துவழி காணும்.|9||


திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை 
முளைத்த(து)என முகட்டின் டை பறக்கஅற 
விசைத்ததிர ஓடும்.|10||

சுடர்ப்பரிதி ஒளிப்ப நில வொழுக்குமதி 
ஒளிப்ப அலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் 
ஒளிப்பிரபை வீசும்.|11||

தனித்துவழி நடக்கும் என திடத்தும் ஒரு 
வலத்தும் இருபுறத்தும் அருக டுத்திரவு 
பகற்றுணைய தாகும்.|12||

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் 
ஒழித்தவுணர் உரத்ததிர நிணத்தசைகள் 
புசிக்க அருள் நேரும்.|13||

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது 
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிரம் 
நிறைத்து விளை யாடும்.|14||

சூரர்க்கு முநி வரர்க்குமக பதிக்கும்விதி 
தனக்கும் அரி தனக்கும்நரர் தமக்கும் உறும் 
இடுக்கண்வினை சாடும்.|15||

சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் 
பெருத்தகுடர் சிவத்த தொடை எனச்சிகையில் 
விருப்பமொடு சூடும்.|16||

சூரர்க்கு முநி வரர்க்குமக பதிக்கும்விதி 
தனக்கும் அரி தனக்கும்நரர் தமக்கும் உறும் 
இடுக்கண்வினை சாடும்.|17||

சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் 
பெருத்தகுடர் சிவத்த தொடை எனச்சிகையில் 
விருப்பமொடு சூடும்.|18||

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் 
ஒழித்தவுணர் உரத்ததிர நிணத்தசைகள் 
புசிக்க அருள் நேரும்.|19||

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது 
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிரம் 
நிறைத்து விளையாடும்.|20||

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி 
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் 
ஒளிர்பிரபை வீசும்.|21||

தனித்துவழி நடக்கும் என திடத்தும் ஒரு 
வலத்தும் இருபுறத்தும் அருகடுத்ரவு 
பகற்று ணைய கும். |22||

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு 
கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரக்குகையை 
இடித்துவழி காணும்.|23||

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை 
முளைத்த(து)என முகட்டினிடை பறக்கஅற 
விசைத்(து) அதிர் ஓடும்.|24||

துதிக்கும் அடியவர்க்(கு)ஒருவர் கெடுக்க இடர் 
நினைக்கின் அவர் குலத்தைமுதல்    
றக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்.|25||

தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண
ழைப்ப(து)என மலர்க்கமலத கரத்தின்முனை 
விதிர்க்க வளை(வு)ஆகும்.|26||

பனைக்கைமுக படக்கரட மதத்தவள 
க்கடவுள் பதத்(து) இடு(ம்)நி களத்துமுளை 
தெறிக்க வரம் ஆகும்.|27||

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு 
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு கடித்துவிழி 
விழித்தலற மோதும்.|28||

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை 
அடுத்தபகை அறத்(து)எறிய உறுக்கிஎழும்
றத்தை நிலை காணும்.|29||

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி 
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை 
கழற்கு நிகர் ஆகும்.|30||

Also Read -  ஸ்ரீ தேவி ஸப்தஸ்லோகி : Sri Devi / Durga Saptha Sloki with tamil meaning pdf

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை 
கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி 
விழிக்குநிகர் ஆகும்.|31||

திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன் என(து) உளத்தில்உறை 
கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.|32||


தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி 
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை 
கழற்குநிகர் ஆகும்.|33||

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை 
அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கிஎழும்
றத்தைநிலை காணும்.|34||

 திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன் என(து) உளத்தில்உறை 
கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே|35||


பருத்தமுலை சிறுத்த இடை வெளுத்தநகை 
கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி 
விழிக்குநிகர் ஆகும்.|36||

தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண
ழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை 
விதிர்க்க வளை(வு) ஆகும்.|37||

துதிக்கும் அடியவர்க்(கு)ஒருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தைமுதல் 
அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும்.|38||

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு 
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு கடித்துவிழி 
விழித்தலற மோதும்.|39||

பனைக்கைமுக படக்கரட மதத்தவள 
க்கடவுள் பதத்(து) இடு(ம்)நி களத்துமுளை 
தெறிக்க வரம் ஆகும்.|40||

தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு 
வலத்தும் இருபுறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு 
பகற்றுணைய(து)ஆகும்.|41||

சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
 ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் 
ஒளிப்பிரபை வீசும்.|42||

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை 
முளைத்த(து)என முகட்டினிடை பறக்கஅற 
விசைத்(து) அதிர ஓடும்.|43||

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு 
கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை 
இடித்துவழி காணும்.|44||

சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் 
பெருத்தகுடர் சிவத்த தொடை எனச்சிகையில் 
விருப்பமொடு சூடும்.|45||

சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி 
தனக்கும் அரி தனக்கும்நரர் தமக்கும் உறும் 
இடுக்கண்வினை சாடும்.|46||

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது 
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிரம்
 நிறைத்து விளையாடும்.|47||

பசித்தலகை முசித்துழுது முறைப்படுதல் 
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
 புசிக்க அருள் நேரும்.|48||

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது 
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிரம்
 நிறைத்து விளையாடும்.|49||

பசித்தஅலகை முசித்தழுது முறைப்படுதல் 
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்க அருள் நேரும்|50||

சலத்துவரும் அரக்கர் உடல் தொழுத்துவளர் 
பெருத்தகுடர் சிவத்த தொடை எனச்சிகையில் 
விருப்பமொடு சூடும். |51||

சூரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி 
தனக்கும் அரி தனக்கும்நரர் தமக்கும் உறும் 
இடுக்கணவினை சாடும்.|52||

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை 
முளைத்தென முகட்டினிடை பறக்கஅற 
விசைத்ததிர ஓடும்.|53||

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு 
கவிப்புலவன்  இசைக்குருகி வரைக்குகையை 
இடித்துவழி காணும்.|54||

தனித்துவழி நடக்கும் என இடத்தும் ஒரு 
வலத்தும் இருபுறத்தும் அருகடுத்திரவு 
பகற்றுணைய தாகும்.|55||

சுடர்ப்பரிதி ஒளிப்ப நில(வு) ஒழுக்கு(ம்)மதி 
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் 
ஒளிப்பிரபை வீசும்.|56||

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி 
விழித்தலற மோதும்.|57||

பனைக்கைமுக படக்கரட மதத்தவள .
க்கடவுள் பதத்திடுநி களத்துமுளை 
தெறிக்க வரம் ஆகும்.|58||

தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உண
ழைப்பதென மலர்க்கமல கரித்தின்முனை 
விதிர்க்க வளை வாகும்.|59||

துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் 
நினைக்கின் அவர் குலத்தைமுதல் 
அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். |60||

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன் எனதுளத்தில் உறை
கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.|61||


பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை 
கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி 
விழிக்குநிகர் ஆகும். |62||

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி 
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை 
கழற்கு நிகர் ஆகும்.|63||

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை 
அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கிஎழும்
றத்தைநிலை காணும்.|64||

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை 
விருத்தன் எனதுளத்தில் உறை
கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.|65||
SUBHAM!!!

Post a Comment

1 Comments