Thirupugal lyrics in tamil pdf / அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் lyrics

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் lyrics

THIRUPUGAL
THIRUPUGAL 

திருப்புகழில் 1334 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர்.

'திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்னு சொல்வார்கள். என்னைக் கேட்டால், வாழ்க்கையே மணக்கும் எனச் சொலவேன். எல்லா கடவுளர்களின் திருநாமங்களோடும் இயல்பா இணையற அழகு, முருகப்பெருமானின் திருநாமங்களுக்கு மட்டுமே உண்டு.

திருமண திருப்புகழ் பாடல் வரிகள்

 முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண. 
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின் 
முற்பட்டது கற்பித் திருவரு
முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப்
 பத்துத்தலை தக்கக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பயல் மெச்சத் தகுபொருள்
 பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது மொருநாளே
 தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுவொடு கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு 
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை 
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே. 1

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே 
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே 
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம மர்ந்தபெரு மாளே.2

கலைமேவு ஞானப் பிரகாசக் 
கடலாடி ஆசைக் கடலேறி
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
 மனமேவு வாலக் குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே 
திருவாணி கூடற் பெருமாளே 3.

ஈனமிகுத் துளபிறவி யணுகாதே 
யானுமுனக் கடிமையென வகையாக
ஞானஅருட் டனையருளி வினைதீர 
நாணமகற் றியகருணை புரிவாயே
தானதவத் தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ முருகோனே 
ஆனதிருப் பதிகமரு ளிளையோனே 
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.4

சஞ்சலந் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே 
கந்தனென் றென்றுற் றுனைநாளும் 
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ 
தந்தியின் கொம்பைப் புணர்வோனே 
சங்கரன் பங்கிற் சிவைபாலா 
செந்திலங் கண்டிக் கதிர்வேலா 
தென்பரங் குன்றிற் பெருமாளே.5

இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலே 
இளவாடையு மூருகொ றுக்கும் படியாலே 
சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே 
தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே 
குமராமுரு காசடி லத்தன் குருநாதா 
குறமாமக ளாசைத ணிக்குந் திருமார்பா 
அமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனே 
அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே 6.

 இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி 
உனையெனது ளறியு மன்பைத் தருவாயே
 மயில் தகர்க லிடைய ரந்தத் தினைகாவல்
 வனசகுற மகளை வந்தித் தணைவோனே 
கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வே 
கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே.7

கீத விநோத மெச்சு குரலால
 கீறு மையார் முடித்த குழலாலே
 நீதி யிலாத ழித்து முழலாதே 
நீமயி லேறி யுற்று வரவேணும் 
சூதமர் சூர ருட்க பொருசூரா
சோண கிரியி லுற்ற குமரேசா 
ஆதியர் காதொ ருச்சொ லருள்வோனே 
ஆனை முகார்க னிட்ட பெருமாளே.8

 பாண மலரது தைக்கும் படியாலே
பாவி யிளமதி கக்குங் கனலாலே 
நாண மழிய வுரைக்குங் குயிலாலே 
நானு மயலி லிளைக்குந் தரமோதான் 
சேணி லரிவை யணைக்குந் திருமார்பா
 தேவர் மகுட மணக்குங் கழல்வீரா
 காண அருணையில் நிற்குங் கதிர்வேலா
 காலன் முதுகை விரிக்கும் பெருமாளே.9

 காமியத் தழுந்தி யிளையாதே 
காலர்கைப் படிந்து மடியாதே 
ஓமெழுத்தி லன்பு மிகவூறி 
ஓவியத்தி லந்த மருள்வாயே
 தூமமெய்க் கணிந்த சுகலீலா 
சூரனைக் கடிந்த கதிர்வேலா 
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே10

 திமிர வுதநி யனைய நரக 
செனன மதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
 மறிவு நிறையும் வரவேநின் 
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் வரவேணும் 
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள மிகவேநீள்
 சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே 
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே
 மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.11

அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை
 பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ 
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா
 கற்றுற் நுணர்போதா கச்சிப் பெருமாளே.12

 இரவடகற் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித் 
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே 
பாகருணைப் பெருவாழ்வே பரசிவதத் துவஞானா 
அரனருள்சர் பதல்வோனே அருணகிரிப் பெருமாளே.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய மலர், பழம், நைவேத்தியம் ஆகியவற்றைப் படைத்துப் பகிர்ந்து உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சியே! தனி கடன் தொல்லையால் தவிப்பவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுபவர்கள், மகனுக்கோ மகளுக்கோ இன்னூர் திருமணயாகவில்லை என ஏங்குபவர்கள், சொந்தமா வீடு வாசல் அமையவில்லையே என அல்லாடுபவர்கள், பூர்வீகச் சொத்துப் பிரச்னைல் சிக்கி, கோர்ட்டு கேஸ்னு அலைபவர்கள், இப்படி "துக்கத்தோடயும் வேதனையோடயும் யார் இருந்தாலும், அவங்க ஒரேயொரு முறை இந்தத் திருப்புகழ் மகா மந்திர பூஜையைச் செய்தால் போதும். இல்லையெனில் அதில் கலந்து கொண்டால் போதும்; அவர்களின் பிரச்னை சீக்கிரமே திரர்ந்துவிடும். அவர்கள் நினைத்தது நிச்சயம் நடந்தே திரும். 

மிகவும் வலிமையானது திருப்புகழ் அப்படிப்பட்ட திருப்புகழைக் கற்க, திருப்புகழைக் கேட்க, திருப்புகழை நித்தமும் ஐபிக்க, திருப்புகழ் பூஜைணம் அனுதினமும் அரிச்சிக்க, முக்தி எளிதாகும்து சொல்லுது திருப்புகழ் சிறப்புப் பாயிரம் பாடல். அந்தத் திருப்புகழை, மகா மந்திரத்தை ஜபித்து, பூஜித்து வணங்குவோம்; வளமுடன் வாழ்வோம்.

திருப்புகழின் பிரபாவம் பற்றிய பாடுகின்ற "திருப்புகழ் பாயிரம்"

Post a Comment

0 Comments