Thiruvempaavai Padalgal
திருச்சிற்றம்பலம்
திருவெம்பாவை ஆசிரியர்?
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை பாடல் வரிகள்:-
திருவெம்பாவை
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போதுஇப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ?
நேரிழையாய் ! நேரிழையீர்
சீசி ! இவையுஞ் சிலவோ? விளையாடி
ஏ சு மிடம்ஈதோ ? விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன், சிவலோகன், தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்||2||
முத்தன்ன வெண்ணகையாய் ! முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன், ஆனந்தன், அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்துன் கடைதிறவாய்,
பத்துடையீர்! ஈசன் பழஅடியீர்! பாங்குடையீர்!
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ ?
எத்தோநின் அன்புடைமை ? எல்லோ மறியோமோ ?
சித்தம் அழகியார் பாடாரே நம்சிவனை?
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்||3||
click here to view Shivapuranam
click here to view vaithiyanadha askatam
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே !
உன்னைப் பிரானாகப் பெற்றவுள் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னரே எங்கணவ ராவார்; அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் ;
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்,
என்ன குறையு மிலோமேலோர் எம்பாவாய்|| 9||
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துள் கழல்பாடி,
ஐயா! வழியடியோம் வாழ்த்தோங்காண் ஆரழல்போற்
செய்யா! வெண்ணீரு ! செல்வா! சிறுமருங்கும்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா ! நீ ஆட்கொண் டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும வகை யெல்லா முய்ந்தொழிந்தோம்;
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்||11||
பைங்குவளைக் கார்மலரால், செங்கமலப் பைம்போதால்,
அங்கங் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,
தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்களப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்|| 13||
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும்
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்||16||
செங்க ணவன்பால் திசை முகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி! நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்||17||
அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாசி மித்தனையும் வேருகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே ! இப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். ||18||
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்!
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க :
கங்குல் பகலெங்கண் மற்றென்றுங் காணற்க
இங்கி பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்||19||
karthikapuranam day 17 click here
திருச்சிற்றம்பலம்!!! தில்லையம்பலம்!!!
திருவெம்பாவை பாடல்கள் எத்தனை?
திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள் கொண்டவை.- முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச்செல்லுதலையும்,
- ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும்,
- பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையைகேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன.
- அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ள பாடல்கள்.
0 Comments