Karthika Puranam Story - Tamil - chapter 4 pdf

 

Karthika Puranam Story - Tamil - chapter 4 pdf
Karthika Puranam Story - Tamil - chapter 4 pdf

கார்த்திகா புராணம் தமிழில் நான்காவது அத்யாயம்

ஓ பாமா ! பூர்வத்தில் பகவான் மத்ஸ்யாவதாரம் எடுத்த சரித்திரத்தை , விஸ்தாரமாக நாரதர் ப்ருது மஹாராஜருக்குச் சொல்லியபடி , நானும் உனக்குச் சொல்கின்றேன் , கேள் ! என்று கூறத்துவங்கினார் . 

Karthika Puranam Day 3 - pdf

அகிலலோக சரண்யனான ஸ்ரீமந்நாராயணன் மத்ஸ்ய அவதாரம் எடுப்பதற்காக வைகுண்டத்தினின்று புறப்பட்டு விந்திய மலைக்குச் சென்றார். அப்பொழுது அவ்விந்திய மலையில் வசித்து வந்த காஸ்யப மஹாமுனிவர் ப்ராதக் காலத்தில் செய்யவேண்டிய சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை அனுஷ்டிப்பதற்காக அம்மலைக்கு ஸமீபத்தில் ஓடுகின்ற கங்ககையை அடைந்து ஸ்நானாதிகளை செய்து சந்த்யா ஜபதப அனுஷ்டானங்களை முடித்துக் கடைசியில் புனரர்க்யம் கொடுப்பதற்கு , தனது கமண்டலத்திலுள்ள தீர்த்தத்தை இரு கைகளிலும் ஏந்தி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கையில் பகவான் மத்ஸ்ய ( மீன் ) ரூபம் தரித்து அம்மஹரிஷியாகிய காஸ்யபரின் ஹஸ்தாஞ்ஜலியில் தங்கினார்.
அதை ஞான த்ருஷ்டியால் அறிந்த காஸ்யப மஹ்ருஷி அதி பக்தியுடன் அந்த மத்ஸ்யத்தை எடுத்து தனது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தனது ஆஸ்ரமத்திற்குச் சென்று நீர் நிறைந்த ஒரு பாத்திரத்தில் அம்மீனை விட்டு மிக்க பக்தி சிரத்தையோடு அன்பாக வளர்த்து வந்தார். அம் மீனும் வளர்ந்து பெரியதானவுடன் கிணற்றில் விட்டும் , சிலநாட்கள் சென்ற பின் அம்மீனானது கிணறு கொள்ளாத அளவு மிகவும் பெரிதாகி திமிங்கலம் போன்று வளரவே உருண்டு புரளவும் நீந்தவும் முடியாமல் தத்தளிப்பதைப் பார்த்த முனிவர் தமது சிஷ்யர்களுடன் சேர்ந்து மிக்க சிரமப்பட்டு சுமந்து வந்து சமுத்திரத்தில் கொண்டு சேர்த்தனர் . சிலகாலம் சென்றதும் சமுத்திரத்தையடைந்த அந்த மீனும் பிரம்மாண்டமான பெரும் பர்வதம் ( மலை ) போல வளர்ந்து சுகமாக இருந்து வருகையில் ஒரு நாள் பகவான் தனது மத்ஸ்யாவதார காரணத்தை நினைத்து ஆம் , சங்கன் என்ற அசுரனைச் சம்ஹரிக்கவேண்டிய காலம் இதுவே என நிச்சயித்து , சமுத்ரத்தில் ஒளித்துகொண்டிருக்கும் சென்று சமுத்ரத்தின் அடி பாதாளத்தில் மிகவும் நெருக்கமாகப் படர்ந்திருக்கும் பாசிகளின் இடுக்கில் மறைந்து ஒளிந்து கொண்டிருக்கும் அவ்வசுரனாகிய சங்கனைக் கண்டுபிடித்து அவனோடு அதிக கோபத்துடன் உக்ரமாக யுத்தம் செய்து சம்ஹாரம் செய்து மத்ஸ்ய ரூபத்தை விடுத்து தோஜோமயமான திவ்ய மங்கள விக்ரஹமாகிய தமது ஸ்வய ரூபத்தைத் தரித்து அவ்வசுரனின் சடலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தார்.

108 பெருமாள் பெயர்கள் தமிழ் pdf

கரையில் தமது வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் காட்சி தந்து , ஒப்ரம்மாதி தேவர்களே ! முனிவர்களே ! ஒழிந்தான் அசுரன் . இதோ அவனது சடலம் என்று சொல்லிக் காண்பித்து , அவர்களது பயத்தையும் துக்கத்தையும் போக்கி அங்கிருந்து புறப்பட்டு பத்ரீவனத்தை அடைந்து , தேவர்களுக்கும் ருஷிகளுக்கும் அச்சங்காசுரனது விருத்தாந்தத்தை எடுத்துரைத்து மகிழ்ச்சி ஊட்டினார்.

மேலும் , ரிஷிகளைப் பார்த்து , ஓ முனிவர்களே ! அந்த அசுரனாகிய சங்கன் என்னோடு யுத்தம் செய்யம்பொழுது பிரஹ்ம தேவனிடமிருந்து அபஹரித்து வைத்துக் கொண்டிருந்த வேதங்களையெல்லாம் மூலைக்கு ஒன்றாக வீசி எறிந்து விட்டான் . அவ்வேதங்களும் அலைகளால் அடித்துத் தள்ளப்பட்டு , மூலைக்கொன்றாக விழுந்து கிடக்கின்றன . நீங்கள் யாவரும் , அவ்வாறு விழுந்துகிடக்கும் வேதங்களை ஒன்று சேர்த்து எடுத்துக்கொண்டு வாருங்கள் . நீங்கள் வரும் வரையில் , நானும் தேவர்களும் , பிரயாகை எனும் புண்ய க்ஷேத்ரத்தில் தங்கியிருப்போம் , என்று கூறி விடைபெற்று பிரயாகைக்குப் புறப்பட்டார்கள் . ரிஷிகளும் பகவானது உத்தரவின்படி,ஸமுத்ரத்தையடைந்து, தங்கள் தபோ மஹிமையால் , சமுத்ரத்தில் இறங்கி மூலைக்கொருவராகச் சென்று , ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் மந்த்ர பீஜாக்ஷரங்ளுடன் கூடிய வேதங்களை எல்லாம் பொறுக்கி ஒன்று சேர்த்து எடுத்துக் கொண்டு முனிவர்கள் யாவரும் புறப்பட்டு பிரயாகையை அடைந்து ப்ரம்ம இந்த்ராதி தேவர்களுடன் வீற்றிருக்கும் பகவானின் பாதாரவிந்தங்களில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து தாங்கள் கொண்டுவந்த வேதங்களையும் பகவானது திருவடியில் சமர்பித்தார்கள் . வைகுண்டநாதனும் பரம சந்தோஷமடைந்து , அவ்வேதச் சுவடிகளை பிரம்ம தேவரிடம் கொடுக்க , நான்முகனும் மிக்க சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டு , தான் இழந்துவிட்ட வேதங்கள் எப்போது கிடைக்குமோவென ஏங்கிக்கிடந்து , தவித்துக் கொண்டிருந்த பிரம்மாவானவர் , வேதங்களை அடைந்து விட்ட பெரு மகிழ்ச்சியால் , அந்த பிரயாகையிலேயே " வாஜபேயம் " முதலிய எனும் யாகத்தை ஆரம்பித்து யாகத்தில் கிரமமாக , எந்ததெந்த தேவர்களான விஷ்ணு , இந்திரன் , ருத்ரன் , அஸ்வினி தேவர் சகலதேவர்களையும் அழைத்து முறைப்படி ஹவிர்பாகம் கொடுத்து யாகத்தை யாதொரு குறையுமின்றி பூர்த்தி செய்தார் . அதைக் கண்ட தேவர்களும் , முனிவர்களும் பிரஹ்ம தேவரை வணங்கி , ஹே ப்ரபு ! ஓ பிதாமஹரோ தாங்கள் ஸ்ரீமந்நாராயணின் திவ்ய சந்நிதானத்திலே செய்த வாஜபேயம் என்னும் யாகமானது நமக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்துள்ளது . தாங்கள் இழந்து விட்ட வேதங்களைத் திரும்பவும் பெற்று விட்டதொரு மகிழ்ச்சியாலேயே யாகத்தைச் செய்தீர்கள் . நாங்களும் , நமக்குரிய ஹவிர்பாகத்தை அடைந்தோம் . இது எல்லாம் அருட்பெரும் ஜோதியாக விளங்கும் பரம்பொருளாகிய பகவானது திருவருட் பிரசாதம்தான் என்று கூறி பகவானை ஸ்தோத்ரம் செய்தார்கள் . 

நமஸ்தே ! நமஸ்தே ! ஜகன்நாத விஷ்ணே ! 
நமஸ்தே ! நமஸ்தே ! கதாசக்ரபாணே ! 
நமஸ்தே ! நமஸ்தே ! ப்ரபன்னார்த்தி ஹரின்: 
ஸமஸ்த அபராதம் க்ஷமஸ்வ அகிலேசா !!
ஈரேழு 14 புவனங்களிலும் ( உலகங்களிலும் ) நிறைந்து நிற்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு என் வந்தனம் ! வந்தனம் கதை , சங்கம் , சக்ராயுதத்தை தரித்து நிற்கும் மங்களமூர்த்திக்கு என் வந்தனம்! வந்தனம் !!

சரணம் என்று வந்து அடையும் பக்த கோடிகளின் பாபங்களை போக்கி கார்த்து அருளும் ஹரிக்கு என் வந்தனம்! வந்தனம் !!. அகிலலோக சரண்யனாக விளங்கிவரும் தேவாதிதேவனே என்னுடைய அனைத்து அபராதங்களையும் ( குற்றங்களையும் ) பொறுத்து அருள்புரிவாய் ! 

பகவானும் , ஓ தேவர்களே! முனிவர்களே ! உலகத்தில் யாறொருவர் இந்தக் கார்த்திகை மாதத்தில் கார்த்தீக மாஹாத்மியத்தைச் சிராவணம் செய்கின்றனரோ , அவர்கள் முக்தனாகின்றனர் . தவிர இந்த பிரயாகை க்ஷேத்ரத்தில் பிரம்ம ஹத்தி முதலிய பாபங்களிலிருந்தும் விடுபட்டு ஜீவன்
ஓடுகின்ற நதியின் தீர்த்தமானது , பகீரதனாலே கொண்டு வரப்பட்ட கங்கா தீர்த்தமேயாகும் . இக்கங்கா நதியானது காளிந்தீ நதியுடன் சங்மமாகி இருக்கிறது . ஆகையால் , இந்த நதியானது மிகவும் புண்யமானது . இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து , ஜபம் , தபம் , யக்ஞம் , யாகம் , தானம் சுமங்கலி பூஜை செய்பவர் யாராயினும் எனது சாந்நித்யத்தை அடைவர் . அநேக ஜன்மங்களில் செய்துள்ள பாபங்களும் விலகும் . இந்தத் தீர்த்த ஸ்நானமும் தர்சனமும் மிகவும் விசேஷம் . இங்கு ப்ரத்யக்ஷமாக விளங்கும் என் சந்நிதியில் எந்த உத்தமபுருஷர்கள் தேகத்யாகம் பண்ணுகின்றனரோ , அவர்கள் மறு ஜன்மமின்றி என் ஸ்வரூபத்தை அடைகிறார்கள் . இந்த பிரயாகையில் யாறொருவர் தன் மாதா பிதாக்களை உத்தேசித்து தில தர்ப்பண சிரார்த்தங்களைச் செய்கின்றானோ, அவர்களது பித்ரு வர்க்கங்கள் எனது லோகத்தை அடைவார்கள் . மேலும் , அவர்களுக்கு இவ்வுலகில் தாரித்ரியம் நீங்கி லக்ஷ்மீகரம் உண்டாகும் தை , மாசி இந்த இரு மாதங்களில் இத்தீர்த்தத்தில் காலையில் ஸ்நானம் செய்து அனுஷ்டானம் முடித்து சூர்ய நமஸ்காரம் செய்பவர்களுக்கு சிசு ஹத்தி முதலிய தோஷங்களும் நீங்கி ஸத்யலோகம் கிடைக்கும்  என்று கார்த்தீக விரத மாஹாத்மியத்தைக் கூறி , ஓ தேவர்களே ! முனிவர்களே ! உங்களுக்குற்ற இடர் யாவும் ஒழிந்தது . நான் பத்ரீகாஸ்ரமத்தில் வாஸம் பண்ணப் ப்ரியமாக இருக்கிறேன் . நீங்கள் இந்த கார்த்ததீக விரதத்தைத் தவறாது அனுஷ்டித்து வாருங்கள் என்று கூறி தேவர்களையும் முனிவர்களையும் யதாஸ்தானம் செல்ல அனுமதி கொடுத்து , தானும் விடை பெற்று அந்தர் த்யானமானார் . தேவர்களும் முனிவர்களும் தங்களின் யதாஸ்தானத்தை அடைந்தார்கள் என்று நாரதர் ப்ருது மஹாராஜனுக்கு உறைத்தபடி சங்க வதம் ஏற்பட்டு வேதம் அடைந்த வரலாற்றை கண்ணன் சத்யபாமைக்குக் கூறி முடித்தார்.

நான்காவது அத்யாயம் முற்றிற்று .

Post a Comment

0 Comments