விநாயகர் சப்தகம் pdf / VINAYAGAR SAPTHAKAM TAMIL pdf

Download Now

VINAYAGAR SAPTHAKAM
VINAYAGAR SAPTHAKAM

 விநாயகர் சப்தகம்

 குருவே பரமன் கொழுந்தே பணிந்தேன் 
குவலயம் போற்றும் கணநாதா
வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய் 
வடிவேலவனின் சோதரனே!
 அருள்வாய்! உனையே அனுதினம் பணிவேன் 
அன்னை பராசக்தி அருள்மகனே! 
திருமால் மருகா! திருவடி சரணம்! 
தீன ரக்ஷகனே கணநாதா!1

 ஆணையின் அன்பன் அழகு முருகனின் 
அண்ணனாய் உலகில் அவதரித்தாய்
ஆனைமுகத்தொடு ஐங்கரங் கொண்டதோர்
 அற்புத வடிவே! -கணநாதர 
யானென தென்னும் எண்ணங்கள் நீக்கி
 இகபரசுகமதை எனக்களிப்பாய் 
யானுனை என்றும் இராப்பகல் தொழுதேன் 
என் துயர் களைவாய்! கணநாதா-2

 குஞ்சானே! எழிற் குஞ்சரிநாதனாம் 
குகசரவணபவ சோதரனோ
வெஞ்சமரெதிலும் வெற்றியே தருவாய்! 
வேழமுகத்தோய் கணநாதா
 அஞ்சிடும் அன்பருக் கபயம் அளிப்பாய்! 
அரவணைத் தெனையும் ஆண்டருள்வாய்
 பஞ்சமி! பைரவி! பர்வத புத்தரி
 பார்வதி மைந்தா! கணநாதா!.3

வல்லபை நாதா! விக்ன வினாயகா 
வாழ்த்திப் பணிந்தேன் உன்பதமே!
 வல்வினை எல்லாம் வலிமை இழந்தே
 வாடிச் செய்வாய்! கணநாதா! 
தொல்வினை யாலிவன் துயருறும் அடியேன் 
துன்பமெலாம் நீ துடைத்திடுவாய்! 
அல்லொடு பகலும் அனவரதமும் உன் 
அடியினை தொழுவேன் கணநாதா! 4

ALSO READ துர்கா தேவியின் 108 நாமங்கள் CLICK HERE

 வானொடு நீரும் வளியும் தீயும் 
வையகம் யாவும் உன் வடிவே! 
மானிட வாழ்வை மகிழ்வுறச் செய்வாய்
 மங்கலப் பொருளே கணநாதா! 
தேனோடு பாலும் தெங்கொடு பழமும் 
தெவிட்டா அமுதம் தினம் படைப்பேன்
 ஊனொடு உயிரும் உணர்வும் புரப்பாய்!
உன்னடி தொழுதேன் கணநாதா! 5

 ஓமெனும் வடிவே உன் வடிவாமென 
உலகிற்கெலாம் நீ உணர்த்திடுவாய்! 
ஆம் எனச் சொல்வாய்! அன்னை குமாரா
 ஆதரித்தருள்வாய்! கணநாதா! 
ஓமெனும் ஒலியில் உன்குரல் கேட்டே
உளமகிந்துன் புகழ் பாடிடுவேன் 
ஓமெனும் பொருளே உமயவன் பாலா!
 ஒரு பரம் பொருளே! கணநாதா!6

சங்கரன் மகனே சஞ்சலம் தீர்ப்பாய்
சக்தி குமாரா! கணநாதா!
ஐங்கரனே! உன் அடியினை தொழுதேன்
அடைக்கலம் நீயே கணநாதா! 
சங்கரித் திருவாய் சங்கடமெல்லாம்.
சம்புகுமாரா! கணநாதா!  
 சங்கரி மைந்தா! சந்ததம் பணிவேன் 
சரணம்! சரணம்! கணநாதா! 7
ALSO READ KADAN NIVARANA STHOTHIRAM CLICK HERE

தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் காப்புதான் மிகவும் பிரியமானது.
விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். 
நாபி – பிரம்ம உருவம், முகம் – விஷ்ணு, கண் – சிவரூபம், இடப்பாகம் – சக்தி, வலப்பாகம் – சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.


Post a Comment

2 Comments