Navarathri songs lyrics in tamil pdf - நவராத்திரி பாடல் வரிகள்

Download Now

நவராத்திரி பாடல் 

navarathri songs lyrics in tamil pdf
Navarathri songs lyrics in tamil pdf

நவராத்திரி என்றதும் மங்கையர் எங்களின் 
மனமது தேர்ச்சியைப் பெற்றதம்மா 
கவனமாய்க் கொலுதனை உயர்ந்ததாய் வைத்திட 
உள்ளமும் மோகத்தைக் கொண்டதம்மா
படிப்படியாகவே பல வித பொம்மையை 
விதவிதமாகவே வைத்தோமம்மா 
அடிக்கடி பார்த்தாலும் மனமது சலிக்காமல் 
பார்த்தே மனம்களி கொண்டோமம்மா 
அந்திவேளைதனில் பட்டாடை கட்டியே 
அலங்காரம் முழுவதும் செய்து கொண்டோம் 
பக்தியாய்க் குங்கும் குப்பியுடன் கூடத் 
தையல்கள் பல பேரைக் கூட்டி வந்தோம் 
பலவித ரூபத்தில் தேவி கொலுவிலே 
பரிவுடன் அமர்ந்திட்ட விந்தையதை - நீ 
கலைவாணி தேவியே பத்மாக்ஷி லக்ஷ்மியே 
பார்வதியே என்று பாடினோமே 
ராகாதி எதிரிகள் மனம் வாடிச் சுண்டிட 
சுண்டலைச் செய்துமே வைத்தோமம்மா 
பாங்காய் நீ இன்புறத் தித்திப்பு பக்ஷணம் 
என்றதை உனக்குமே தந்தோமம்மா 
பக்தராம் எங்களின் ஆர்த்தியைப் போக்கிட 
பங்கஜ பாதத்தை நமஸ்கரித்தோம் 
முத்தால ஹாரத்தி உந்தனுக்கே சுற்றி 
மூன்றான சக்தியைப் போற்றி நின்றோம்
வந்த பெண் யாவரும் உந்தனின் ரூபமே 
என்றுமே மனமதைத் தேற்றிக்கொண்டோம் 
சந்தனம் பூசியே மஞ்சளாம் குங்குமம் 
வெற்றிலை பாக்கையும் தந்து நின்றோம் 
உந்தனின் ராத்திரி ஒன்பதும் ஒருமிக்க 
சந்தோஷமாக சென்றதம்மா 
பிந்தியும் நீவர வருஷமும் ஒன்றாகும் 
என்றுமே மனம் உன்னை நாடுதம்மா 
சந்ததம் நீ உந்தன் சேய்களாம் எங்களை 
சொந்தமுடன் காக்க வேண்டுமென்றே 
அந்தரங்க பக்தி கொண்டுமே பாடிடும் 
சுந்தர வார்த்தையைக் கேளுமம்மா

நவராத்திரி பாடலின் பலன்:

நவராத்திரி பாடல் வரிகள் இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் இதனை நவராத்திரி காலத்தில் 108முறை பாடி வந்தார் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மைகள் உண்டாகும்.

Post a Comment

0 Comments