KARTHIKA PURANAM TAMIL DAY 2 pdf

 

கார்த்தீக புராணம் இரண்டாம் அத்யாயம்

KARTHIKA PURANAM TAMIL DAY 2 pdf

இவ்விதமாகக் கண்ணபிரான் சொன்னதைக்கேட்டு சத்யபாமை , ஓ நாதா ! தேவசர்மாவும் , சந்திரனும் வைகுண்டம் அடைந்த பின்னர் சந்திரனின் மனைவியான குணவதி என்ன செய்தாள் ? எப்படிக்காலம் கழித்தாள் ? அவளின் கதி என்னவாயிற்று ? என்பதைச் சொல்ல வேண்டும் என்று கேட்க , கண்ணனும் சொல்லலானார் . 

Download Now 
KARTHIKA PURANAM TAMIL DAY 2 pdf
KARTHIKA PURANAM TAMIL DAY 2 pdf

ஓ பாமையே ! அந்த குணவதியானவள் தனது தந்தையும் , கணவனும் அரக்கனால் அநியாயமாகப் கொல்லப்பட்டதை அறிந்து ஹோவென்று அலறி , அழுது புரண்டு சகிக்க வொண்ணாததுக்கத்தையடைந்து கண்ணீர் வடிய , ஹே , நாதா ! தந்தையே ! தாங்கள் தர்ப்பை சமித்து வகைகளைச் சேகரித்துக்கொண்டு வருகிறோம் என்று , என்னைத் தனியாக விட்டுச் சென்று அதியாயமாய் அரக்கனால் கொல்லப்பட்டு பரலோகம் அடைந்து விட்டீர்களே ! இனி என்னை ஆதரிப்பவர் யார் ? ஓ ! தெய்வமே ! நான் இதற்காகவா பெண் ஜென்மம் எடுத்தேன் , சின்னஞ்சிறுமியான நானென்ன செய்யப் போகிறேன் . இனி எனக்கு அன்னவஸ்திரம் முதலியவைகளை கொடுத்து யார் காப்பாற்றுவார் . தெய்வமே ! இதுவும் உனது சோதனையோ ? பிழைக்க வழியற்று அனாதையான நான் யாரை சரண் புகுவேன் ? யார்தான் என் கஷ்டத்தை அறிந்து என் கவலையை போக்குவார் . அபலையான நான் எவ்விதம் பிராணணை வைத்துக் கொண்டு இனி சகித்திருப்பேன் . 

கார்த்தீக புராணம் முதல் அத்யாயம்

அப்பா ! ஓ நாதா ! நானும் உங்களோடு வந்து சேருகிறேன் என்று மிகவும் துக்கத்திலாழ்ந்து அடியற்ற வாழைமரம் போல் தடாலென்று கீழே விழுந்து மூர்ச்சையானாள் . பின்னர் வெகுநேரம் கழித்து தானாகவே மூர்ச்சை தெளிந்து , அந்த குணவதியானவள் பரகதியடைந்த பர்தாவுக்கும் , பிதாவுக்கும் செய்யவேண்டிய “ உத்திரகிரியைகளையும் " முறைப்படி செய்து முடித்து பதின்மூன்றாம் நாளன்று எண்ணெய் ஸ்தானம் செய்து தீபாலங்காரம் முதலியவைகளைச் செய்து முடித்து விட்டு மிகவும் பரிசுத்தத்தோடு கூட உண்மையை கடைப் பிடித்துக் கொண்டு நல்ல நியமத்துடன் சாந்த குணமே கைக்கொண்டு சதா விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு வயிற்றுப் பிழைப்புக்காக அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளில் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு அப்பட்டணத்திலேயே தன் வாழ்நாளைக் கழித்துவந்தாள் என்றார் . 

அதைக்கேட்ட சத்தியபாமை தனது நாதனை நோக்கி ,ஓ  நாதா அப்பேர்ப்பட்ட கஷ்டமான நிலைமையில் காலம் கழித்து வந்த குணவதியின் முடிவைக்கூற வேண்டுகிறேன் என்று கேட்கவே , வாசுதேவன் மீண்டும் சொல்லலானார் .

ஸ்ரீ லலிதா த்ரிசதி தமிழில் காண

ஹே ப்ரியோ அந்த குணவதியானவள் தாங்கவொண்ணாத மனதுடையவளாய் மிகவும் கஷ்டமான நிலைமையில் காலம் கழித்து வந்த போதிலும் அவள் தவறாது அனுஷ்டித்து வந்த கார்த்திக விரதத்தின் மஹிமையாலும் , சதா சன்மாக்கத்தில் ஈடுபட்டு பகவத் கைங்கர்யம் செய்துவந்ததின் ஓர் தவப்பயனாலும் என்னையே நாயகனாக அடைந்து இருக்கிறாள்.
நீயே அந்தக்குணவதி என்பதை அறிவாயாக! என்று சொல்லவே , அதைக்கேட்ட சத்யபாமை மிகு   என்ற ஆச்சரியத்தினால் சந்தோஷம் அடைந்து , ஹே ஆபத்பாந்தவா ! அனாதரக்ஷகா ! கருணாநிதியான தாங்கள் , மஹிமை மிகுந்த கார்த்தீக விரதத்தைப்பற்றி இன்னும் சாங்கோபாங்கமாக விளக்கமாக தெரிவிக்கவேண்டுமென்று வினவ ... வசுதேவ நந்தனன் மேலும் சொல்லலானார்.

ஹே பாமா ! எவனொருவன் விருச்சக ராசியில் சூரியன் சஞ்சரிக்கின்ற கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் , சந்த்யா வந்தனம் , ஜபம் , தபம் முதலிய அனுஷ்டானங்களை முறையாய் முடித்து கார்த்திக விரதத்தை நியமத்துடன் அனுஷ்டித்து , தான , தர்ம காரியங்கள் செய்து வருகிறானோ , அவன் அனைத்து பாவங்களினின்றும் விடுபடுகிறான் . 

எவனொருவன் கங்கை முதலிய புண்ய நதிகளில் ஸ்நானம் செய்து பகலில் நித்திரை செய்யாமல் இரவில் தீபமேற்றி துளசி வனத்தைப் பரிபாலித்து வருகிறானோ , அவன் விஷ்ணு ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான் . மேலும் எவனொருவன் விஷ்ணு ஆலயத்தைக் கூட்டி மெழுகி சுத்தம் செய்து கோலம் இட்டு விஷ்ணுவின் சந்நிதியிலே அத்யயனம் செய்கின்றானோ அல்லது விஷ்ணு ஆராதனை செய்கின்றானோ அவன் ஜீவன் முக்தனாகிறான் . தவிர கார்த்திகை மாதத்தில் மூன்று நாள் உபவாசமிருந்து நியமம் தவறாது கார்த்தீக விரதம் அனுஷ்டிக்கிறவன் தேவர்களுக்கு அரசனாவான் . என்று கார்த்திக மாஹாத்மியததைக் கூறிய பின் பகவான் மேலும் சொல்லலானார் . 

சத்யா ! இப்பேர்ப்பட்ட மஹிமை பொருந்திய கார்த்திக விரதத்தை அந்த குணவதியானவள் வருடாவருடம் தவறாமல் மனதுடன் விஷ்ணு ஆலயத்தில் அனுஷ்டித்தும் , மிகுந்த பக்தியோடு தேவ கைங்கர்யங்களையும் செய்துவந்தாள் . இப்படியாகக் காலம் கழித்து வந்த குணவதியானவள் கிழப் பருவமடைந்து , சரீரம் மெலிந்து , தேக சௌக்யமின்றி , ஜூ தாபத்தினால் பீடிக்கப்பட்டு , கார்த்திகை மாதத்திய கார்த்திக விரதத்திற்காக ஸ்நானம் செய்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு தங்கைக்கு நீராடச் சென்றாள் . அங்கு சென்று கங்கையில்  இறங்கியதும் குளிர் தாங்காது தேகமெல்லாம் நடுங்க ஸ்நானம் செய்யவும் முடியாமல் நிற்கவும் அசையவும் எழுந்திருக்கவும் சக்தியற்றவளாய் தத்தளித்துக் கொண்டு மிக்க விசனத்தோடு பகவானைத் துதித்துக் கொண்டு இருக்கையில் ஆகாய மார்க்கமாய் வந்து கொண்டிருக்கும் ஓர் விமானத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்து , இது என்ன அண்ட ரண்ட பக்ஷியோ அல்லது தேவவிமானமோவென எண்ணிக்கொண்டிருக்கையில் விமானமானது அவளது அருகில் நெருங்கவே அந்த விமானத்தின் நான்கு பக்கங்களிலும் நான்குவித வர்ணக் கொடிகளும் கூடினதாய் சங்குசக்ர கதாபாணியான பகவான் போன்ற திவ்ய தேஹிகள் ஆரோகணித்து வருவதையும் அறிந்து எல்லையில்லாத ஆனந்தமடைந்து பக்தி மேலிட்டு பகவானை ஸ்தோத்தரித்துக் கொண்டிருக்கையில் கருடக்கொடி பறக்கவும் பல அற்புதமான அலங்காரங்களோடு கூடிய அந்த விமானத்திலேயே தேவர்கள் அந்தக் குணவதியை ஏற்றிக்கொண்டு அப்ஸரஸ்திரீகள் உபசாரம் செய்ய வைகுண்டம் அடைந்தாள் . 

ஓ , பாமா ! அப்பேர்ப்பட்ட புண்யவதியான நீயே அந்த குணவதி என்று கூறியபின் மீண்டும் கார்த்தீக விரத மஹிமையைத் தொடர்ந்து சொல்லலானார் .

ஸ்வர்க்க மத்ய பாதாள லோகவாசிகளாக இருப்பவர்கள் யார் யார் என்ன என்ன ப்ரார்த்தனை செய்து கொள்கிறார்களோ அவைகளை நிறைவேற்ற நானும் எனது கணங்களும் பிரசன்ன மாகி அவர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வோம் . ஹே சத்யபாமையே ! " உனது பூர்வ ஜன்ம பிதாவான ' ' தேவ சர்மாவே சத்ரஜித்தாகப் பிறந்திருக்கிறான் . " உனது பூர்வஜன்ம பர்த்தாவான ' ' சந்திரன் அக்ரூரனாகப் பிறந்து இருக்கிறான் என்பதை உணர்வாய் . மேலும் கார்த்திகை மாதத்தில் கார்த்திக விரதத்தை அனுஷ்டித்து வந்த பல மஹிமையால் எனக்கு உன்மேல் மிகவும் ப்ரீதியை உண்டாக்கினாய் . அதன் பலத்தினாலேயே உனக்கு இந்த தேவ கற்பகவிருக்ஷம் கிடைத்துள்ளது . நீ கார்த்திகை மாதத்தில் செய்த தீப தான மஹிமையால்தான் ஸ்ரீலக்ஷ்மீ தேவியே உன்னோடு கூட வசிக்கிறாள் . பிரதி பக்ஷம் தவறாமல் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து அதன் பலனை தர்மஸ்வரூபமான எனக்கு அர்ப்பணம் செய்தாய் . அதன் விசேஷத்தினால் நீ எனக்கு மனைவியாக ஆகியிருக்கிறாய் . மேலும் , ஜனனம் முதல் மரணம் பர்யந்தம் மிகவும் பக்தி சிரத்தையுடன் எவர் கார்த்திக் விரதத்தை அனுஷ்டிப்பார்களோ அவர்களுக்கு அளவிலாத அன்புகாட்டி எனது சாந்நித்யத்தை அடையச் செய்வேன் . உலகில் செய்யப்பட்ட தானம் தபம் யக்ஞம் முதலிய எதுவும் இந்த கார்த்தீக விரதத்திற்கு ஈடாகாது என்று பகவான் சொல்லக்கேட்ட சத்யபாமை மிகவும் சந்தோஷித்து விஸ்வ ( உலக ) நாயகனான கிருஷ்ண பரமாத்மாவை நமஸ்கரித்து பெருமகிழ்ச்சி அடைந்தாள் . கணவனான கண்ணனை ஆரத்தழுவிக் கொண்டாள் . 

இரண்டாவது அத்யாயம் முற்றிற்று

Post a Comment

0 Comments