maadi thottam in tamil pdf / மாடித்தோட்டம் எப்படி அமைக்க வேண்டும் மற்றும் அதன் பயன்கள் தமிழில்

Download Now
மாடித்தோட்டம் pdf
மாடித்தோட்டம் pdf

ஏன் மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் ... 

மாடித்தோட்டத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு மீத்தேனை பற்றி பார்ப்போம் .

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில்

வேண்டியது , வேண்டாதது 

பால்வளம் பெருகும் . 1 கிலோ மீத்தேன் வாயு வேண்டுமானால் 37 லிருந்து 40 கிலோ மாட்டுச்சாணம் தேவை ! மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீதேன் எடுக்க 6000 கோடியில் முப்பது வருடத்தில் எடுக்க அரசு திட்டம் . இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தில் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை . இதற்கான செலவு சுமார் 1850 கோடிகள் . இயற்கையை அழித்து பூமியை வறட்சியாக்கி விவசாயத்தை ஒழித்து 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை 1850 கோடியில் எடுக்க முடியும் . கூடுதல் பலனும் கிடைக்கும் . 

 1. விவசாயிகளின் வாழ்வு மேம்படும் . 
 2. இயற்கை வளம் மேம்படும் . 
 3. விவசாயம் செழிக்கும் . 
 4. முக்கியமாக சுற்று சூழல் பாதிக்காது . 

30 வருடத்தில் தீர்ந்துவிடும் மீத்தேன் தேவையில்லை . ஆண்டாண்டுக்கு தொடரும் சாண எரிவாயுவே தேவை ! 

சரி மாடித்தோட்டத்திற்கு செல்வோம் . அமைப்பது எப்படி ? / Maadi Thottam Ideas in Tamil 

 1. அவரவர்கள் மாடியில் குரோபேக் . இடைவெளி இரண்டடி வீதம் வைக்க வேண்டும் . பேக்கில் பாதி அளவிற்கு தென்னைநார் கழிவு வைக்கவும் . இது தண்ணீரை 5 முதல் 6 மடங்கு சேமிக்கும் திறன் கொண்டதாகும் . பேக்கின் மேல் பாதியில் செம்மண் , மண்புழு உரம் , இயற்கை உரம் , நைட்ரஜன் , பாஸ்பரஸ் , பொட்டாஷ் -ன் உயிரியல் பேக்டீரியாக்கள் கலந்து நிரப்பிக்கொண்டு தேவையான நாட்டுரக விதைகளை தேர்வு செய்யவும் . 
 2. விதை நடவிற்கு தனி தட்டு தேர்ந்தெடுக்கவும் . 
 3. மாடியில் வாழ்வு அதிகமான வாழை முதலியன தேர்ந்தெடுப்பின் பிளாஸ்ட்டிக் 25 கி ட்ரம் , வாளி முதலிய பழைய பொருட்களை பயன்படுத்தியும் தயார் செய்யலாம் . NEWS
 4. பசுமை தோட்டம் அமைக்க வீட்டிற்கு அருகில் நிழல் தரும் வலைகள் படத்தில் கண்டவாறு அமைத்து பயன்பெறலாம் . இதனை மாடித்தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம் .

மாடித்தோட்டம் , பசுமைத்தோட்டம் , அடுக்குமாடி தோட்டத்திற்கான பயன்கள் :

 1. நஞ்சில்லா காய்கறிகள் . உணவுகள் , 
 2. வீட்டிற்கு சுத்தமான காற்று 
 3. சுற்றுப்புற சூழல் பசுமையாகவும் ஓசோன் சுத்தமாகவும் மாற்ற 
 4. நமக்கு தேவையான உடற்பயிற்கியாகவும் , பயனுள்ள பொழுதுபோக்காகவும் இருக்கிறது . 
 5. இதன் பயன்களை அடுக்குமாடி தோட்டத்தை உருவாக்கியும் படத்தில் கண்டவாறு பயன் பெறலாம் . 

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றவர் கேன்சர்வந்து சாவர் . " 

ஆகையால் நமக்கு நாமே நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து நம்மை காப்போம் .

27 nakshatra mantras in tamil pdf

மேற்கண்ட  மாடித்தோட்டத்திற்கு தேவையானவை  கிடைக்கும் / Maadi Thottam Government kit in Trichy

எங்கு குரோபேக் , மண்புழு உரம் , தென்னை நார்க்கழிவு , நைட்ரஜன் , பாஸ்பரஸ் , பொட்டாஷ் பேக்டீரியாக்கள் , ஆர்கானிக் உரம் , விதை நடவு தட்டு , நாட்டு விதைகள் மற்றும் மண்வெட்டி , களை கொத்தி , மண் இளக்கி , அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் . மற்றும் மேலும் விவரங்களுக்கு .

வானொலி உழவர்கள் சங்கம் , 
முதல்மாடி , சித்ரா காம்ப்ளக்ஸ் , 
சத்திரம் பேருந்து நிலையம் , 
திருச்சிராப்பள்ளி , 
தொலைபேசி : 0431 - 2716891 

நாம் அனைவரும் வரும் காலங்களில் சுற்றுச் சூழலை பாதுகாப்போம் ! நஞ்சில்லா உணவை உண்போம் ! உடல் ஆரோக்கியம் பெறுவோம் ! முக்கியமாக வரும் சந்ததியினரை காப்போம் ! 

எங்களது ஆசை அடுக்குமாடி குடியிருப்பு , பசுமை தோட்டம் பல தமிழகம் முழுவதும் கிராமம் முதல் நகரம் வரை பசுமை செழிக்க வேண்டும் ! தமிழகம் உயர வேண்டும் ! 

நன்றியுடன் ... 
மாடித்தோட்டம் பயன்கள்
பா.தனபால்

மாநில விற்பனை மேலாளர் , கோல்டு பார்ம்ஸ்.
திருச்சி , 98947 88305 .

Post a Comment

0 Comments