Avani Avittam Tamil / பூணூல் உணர்த்துவது, வரலாறு

ஆவணி அவிட்டம் பூணூல் பண்டிகை 

காயத்ரி மந்திரம் 

ஓம் பூர் புவஸ் ஸுவஹ தத்ஸ விதுர்விரண்யம் -
 பர்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோநாம ப்ரசோதயாத்!!
Avani Avittam Tamil பூணூல் உணர்த்துவது, வரலாறு
Avani Avittam Tamil  பூணூல் உணர்த்துவது, வரலாறு

 காயத்ரி மந்திரத்தில் 9 பெயர்கள் உள்ளன . 

 1.  ஓம் ,
 2.  பூர் , 
 3.  புவஹ 
 4.  சுவஹ . 
 5.  தத் 
 6. சவிதர்
 7. வரேண்யம் ,
 8. பர்க்கோ 
 9. தேவஸ்ய

 எனும் 9 பெயர்களால் இறைவன் புகழப்படுகிறார். 

"தீமஹி " என்பது இறைவழிபாடு 

, தியோயோனப் பிரசோதயாத் " என்பது பிராத்தனை .

 "ஓம்" என்பது முதல் நிறுத்தம் ,

 "பூர்வ புவஸ் ஸுவ" என்பது 2 வது நிறுத்தம் 

 "தத்சவிதுர் வரேனியம் " என்பது 3 வறு நிறுத்தம் . 

"பர்க்கோ தேவஸ்ய தீமஹி " என்பது 4 வது நிறுத்தம் . " 

"தியோயோனப் பிரசோதயாத்"  என்பது 5 வது நிறுத்தம் .

இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது ஒவ்வொரு நிறுத்தத்திலும் சற்றே நிறுத்தி மேற்கொண்டு சொல்லவும் , எல்லோருக்கும் பொதுவானதாக அமையவே "காயத்ரி மந்திரம் " ஏற்படுத்தியுள்ளார்.

you may also refer  Gayathri manthra's various god click here  

காயத்ரி மந்திரம் ஒரு பெருஞ்செல்வம் , இதை காலையில் , மாலையில் , இரவு படுக்கும் பொழுது , பிரயாணம் செய்யும் பொழுது , சாப்பிடும் முன் எப்போது வேண்டுமென்றாலும் சொல்லலாம் .

பூணூல் பண்டிகை /ஆவணி அவிட்டம் 

சுக்லாம் பரதரம் , ஆசமனம் , ப்ராணாயாமம் , சங்கல்பம் செய்த பிறகு 

யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய , பரப்ரஹ்ம ரிஷி -
 திருஷ்டுப் சந்த ; பரமாத்மா தேவதா - ப்ரஹ்ம தேஜாபீ 
விருத்யர்த்தம் யக்ஞோபவீத தாரணே விநியோக : 

என்று நீயாஸம் செய்து பூணூலின் முடி வலதுகை உள்ளங்கை ஆகாசத்தையும் , இடது உள்ளங்கை பூமியை பார்க்கும் படிவைத்துக் கொண்டு பின்வரும் மந்திரத்தை சொல்லி போட்டுக் கொள்ளவும் .

"யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் 
  ப்ரஜாபதே ; யத் புரஸ்தாத் ! 
  ஆயுஸ்ய மக்ரியம் ப்ரதிமுஞ்ச ஸுப்ரம் 
  யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ : !!"

 பிறகு ஆசமனம் செய்தகீழ்க்கண்ட படி சொல்லி பழைய பூணூலை கழற்றவும்.

 உபவீதம் பிந்நந்தும் ஜீர்ணம் கச்மல தூஷிதம் 
விஸ்ருஜாமி புனர்ப்ரஹ்மத வர்ச்சே , தீர்காயு ரஸ்துமே . 

பிறகு ஆசமனம் செய்யவும்.

பூணூல் பண்டிகைக்கு வேண்டியது

ஆவணி அவிட்டத்திற்கும் எல்லாப் பண்டிகைக்கு எடுத்துப் போவது போல் எடுத்துக் கொண்டும் , அத்துடன் நவரிஷிகளை ஆவாஹணம் செய்ய 9 கற்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும் . நைவேத்தியத்திற்கு சத்து மாவு செய்ய வேண்டும். அதாவது அரிசி மாவு அல்லது பொட்டுக்கடலை மாவில் நெய் காய்ச்சி ஊற்றவும் . இடித்த சர்க்கரை , வெள்ளரி விதை , எள் , முந்தரி வறுத்துப் போடவும் , ஏலக்காய் மற்றும் நெல் , பொரி கொஞ்சம் போட வேண்டும் , ( அன்று ஆண்கள் எண்ணை ஸ்நானம் செய்யவும் . வடை  பாயாஸத்துடன் போஜனம் செய்யவும் )

ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் - ekadasi vratham in tamil

யக்ஞோபவீதம் / பூணூல் உணர்த்துவது

காயத்ரி மந்தரத்தைச் சொல்லி மனதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டிய கடமையை ஞாபகப்படுத்துவதே யக்ஞோபவீதம் என்னும் பூணூல் ஆகும். பூணூலில் 3 பிரி நூல்கள் உள்ளன

 •  பிரம்மா 
 •  விஷ்னு 
 •  சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் ,
 •  ஸரஸ்வதி ,
 •  லக்ஷிமி ,
 •  பார்வதி , ஆகிய மூன்று தேவிகளையும் , 
 •  ஸத்வ ,
 •  ரஜஸ் ,
 •  தமஸ்.முக்குணங்களையும் , 
 • இறந்த காலம் ,
 •  நிகழ்காலம் , 
 • எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் ,

 • விழிப்பு ,
 • கனவு ,
 • அமைதி ஆகிய 3 நிலைகளையும்
 •  நாம் அனுபவிக்க வேண்டிய பூமி ,
 •  சுவர்க்கம் 
 • ,நரகம் ஆகியவற்றையும் பூணூல் உணர்த்துகிறது .

இதில் உள்ள பிரம்ம முடிச்சு பிரம்மத்தை உணர்த்துவதுடன் உடம்பைத் தீய சக்திகளிலிருந்து காப்பாற்றும் . இத , பிங்கள , சூக்ஷ்ம நாடிகளின் மூலம் குண்டலினி சக்தி பரவி பிராண சக்தியை நாம் உணர இம்மூன்று நூல்கள் வழி காட்டுகின்றன . தான் என்ற கர்வத்தைத் துறந்து யக்ஞம் செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் பொறுப்பைச் செய்வதால் இதற்கு  யக்ஞோபவீதம் என்று பெயர் ஏற்பட்டது . 

பூணூல் வரலாறு

 நீர்மின் சக்தியின் அதிஷ்டான தெய்வம் மகாவிஷ்னு அதாவது விஷ்ணு - குளிர்ச்சி ( நீர் ) , அனல் மின் சக்தியின் அதிஷ்டான தெய்வம் சிவபெருமான் அதாவது சிவம் - சூடு ( அனல் ) இதன் விளக்கங்களை ( ஓம் நமோ நாராயணா , நமசிவாய எனும் ) எட்டெழுத்து மந்திரங்களிலும் , ஐந்தெழுத்து மந்திரங்களிலும் காணலாம் . இம்மகா மந்திரங்களைத் தொடர்ந்து ஜபிக்க நம் உள்ளத்தில் உள்ள தஹராகாசத்தில் அந்தர்யாமி என்ற டைனமோ யந்திரத்தினால் நம்மிடம் ஒப்பற்ற தேஜஸ் ஓங்குகிறது . இதை வீணாகாமல் பாதுகாப்பவை பிரம்ம முடிச்சுடன் கூடிய யக்ஞோப வீதங்களாகும் . எனவே ஆடவர்கள் கண்டிப்பாக அணிவது சிறந்தது.

சுபம்

Post a Comment

0 Comments