Kamakshi Virutham lyrics in Tamil pdf & English pdf

Download Now

Kamakshi Virutham lyrics in English pdf

kamakshi virutham lyrics in english pdf
kamakshi virutham lyrics in english pdf

ஸ்ரீ காமாட்சியம்மன் விருத்தம் - Sri Kamakshi Amman Virutham Lyrics in Tamil

Download Now

விருத்தம் என்றால் என்ன?

 விருத்தம் என்பது கர்நாட்டிக் பாடல் வரிகள் கடவுளைப் போற்றிப் பாடப்படும் பாடலாகும். இவ்வகை பாடல்களை வரிகளை அமைப்பு தகுந்த ராகத்தில் பாடப்படும் ஒரு கர்நாட்டிக் பாடலாகும்.

இங்கு காமாட்சி அம்மனை போற்றி பாடப்படும் காமாட்சி அம்மன் விருத்தம் கீழே காணலாம்

ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் - ekadasi vratham in tamil

த்யானம் 

ஸ்மர விஜயகோடீ ஸாதகா நந்ததாடீ 
ம்ருதுகுணபரிபேடி முக்யகா தம்ப வாடீ 
முநிநுதபரிபாடி மோஹி தாஜண்ட கோடீ 
பரமசிவவ தூடி பாதுமாம் காமகோடீ !! 
ஜெய ஜெய ஜகதம்பிகே சிவே 
ஜெய ஜெய காமாக்ஷி ஜெய ஜெய காமாஷி 

கார்த்தீக புராணம் தமிழில்

விருத்தம் - Sundari Soundari Lyrics in Tamil

சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி 
சோதியாய் நின்ற உமையே 
சுக்கிர வாரத்திலுனை கண்டு தரிசித்தவர்கள் 
துன்பத்தை நீக்கி விடுவாய் 
சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழபவர்கள் 
துயரத்தை மாற்றி விடுவாய் 
ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ 
சிறியனால் முடிந்திடாது 
சொந்தவுன் மைந்தனா யெந்தனை யிரட்சிக்கச் 
சிறிய கடன் உன்னதம்மா 
சிவசிவ மஹேஸ்வரி பரமனிட யீஸ்வரி 
சிரோன்மணி மனோன் மணியுநீ 
அந்தரி துரந்திரி நிரந்தரி பரம்பரி 
யனாத ரட்சகியும் நீயே 
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே      1

Download Now

Kamakshi Virutham Meaning in English pdf

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது 
பாடகந் தண்டை கொலுசும் 
பச்சை வைளியம் மிச்சையா இழைத்திட்ட 
பாதச் சிலம்பினொலியும் 
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும் 
முழுவதும் வைடுரியம் புஷ்பரா கத்தினால் 
முடிந்திட்ட தாலி யழகும் . 
சுத்தமாயிருக்கின்ற காதனிற் கம்மலுக்கு 
செங்கையிற் பொன் கங்கணமும் 
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற 
சிறுகாது கொப்பி னழகும் 
அத்திரவதன் தங்கை சக்தி சிவரூபத்தை 
யடியனாற் சொல்ல திறமோ 
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே .       2

கெதியாக வந்தனைக் கொண்டாடி நினதுமுன் 
குறைகளைச் சொல்லி நின்றும் 
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்து நீ 
குழப்பமா யிருப்பதேனோ 
விதியிது நைந்து நானறியாம லுந்தனைச் 
சதமாக நம்பி னேனே 
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க 
சாதக முனக் கில்லையோ ? 
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய 
மதகஜனை யீன்ற தாயே 
மாயனிட தங்கையே பரமனது மங்கையே 
மயானத்தில் நின்ற வுமையே 
அதிகாரி யென்றுதா னாசையால் நம்பினேன் 
அன்பு வைத்தென்னை யாள் வாய் 
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே .       3

பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்தும் நான் 
பேரான ஸ்தலமு மறியேன் 
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான் 
போற்றிக் கொண்டாடி யறியேன்
வாமியென் றுன்னைச் சிவகாமி யென்றே சொல்லி 
வாயினாற் பாடியறியேன் 
மாதா பிதாவினது பாதத்தை நானுமே 
வணங்கியொரு நாளுமறியேன் 
சாமியெண்றே யெண்ணிச் சதுருடன் கைகூப்பிச் 
சரணங்கள் செய்து மறியேன் 
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு 
சாஷ்டாங்க தெண்டனிட்டறியேன் 
ஆமிந்த பூமியிலடியனைப் போல் மூடன் 
ஆச்சிநீ கண்ட துண்டோ 
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே     4

பெற்றதா யென்றுன்னை மெத்தவும் நம்பிநான் 
பிரியமா யிருந்தே னம்மா 
மெத்தனம் உடையையென்று நானறியாது உன் 
புருஸனை மறந்தே னம்மா 
பக்தனாயிருந்து உன் சித்தமும் இரங்காமல் 
பாராமுகம் பார்த்திருந்தால் 
பாலன் யானெப்படி விசனமில் லாமலே 
பாங்குட னிருப்பதம்மா 
இத்தனை மோசங்க ளாகாது ஆகாது 
இது தர்மமல் லவம்மா 
எந்தனை ரக்ஷிக்க சிந்தனை களில்லையே 
யிது நீதி யல்ல வம்மா 
அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தையோ 
அதை யெனக்கருள் புரிகுவாய் 
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே        5

மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ 
மணிமந்திர காரிநீயே 
மாயாசொ ரூபிநீ மகேஸ்வரியு மானநீ
மலையறை யன்மக ளானநீ 
தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ 
தயாநிதி விசாலாட்சிநீ 
தரணியில் பெயர் பெற்ற பெரிய நாயகியும் நீ 
சரவணனை யீன்ற வளும் நீ 
பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில் 
பேறுபெற வளர்ந்த வளும்நீ 
பிரணவசொரூபிநீ பிரசன்ன வல்லிநீ 
பிரியவுண் ணாமுலையுநீ 
ஆயிமகமாயிநீ ஆனந்தவல்லி நீயே 
அகிலாண்டவல்லி நீயே 
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே      6

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய் 
புத்திகளைச் சொல்லவில்லையோ 
பேய்பிள்ளை யானாலும் தான் பெற்ற பிள்ளையை 
பிரியமாய் வளர்க்க வில்லையோ 
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக் 
கதறி நானழுத குரலில் 
கடுகதனிலெட்டிலொரு கூறுவதி லாகிலுன் 
காதி னுள் நுழைந்த தில்லையோ 
இல்லாத வன் மங்களென் மீதிலேனம்மா 
இனி விடுவதில்லை சும்மா 
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது 
இதுதரும மல்ல வம்மா 
எல்லாரு முன்னையே சொல்லியே , யேசுவார் 
ஏதும் நீதியல்ல வம்மா 
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே .    7

முன்னையோர் சென்மாந்திர மேனென்ன பாவங்கள் 
மூடனான் செய்தே னம்மா
மெய்யன்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டி 
மோசங்கள் பண்ணினேனோ 
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே 
இக்கட்டு வந்த தம்மா 
ஏழைநான் செய்தபிழை தாய்பொறுத்தருள் தந்து 
என்கவலை தீரு மம்மா 
சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே 
சிறுநாண மாகுதம்மா 
சிந்தனைக ளென்மீதில் வைத்து நற்பாக்கியமருள் 
சிவசக்தி காமாட்சி நீ 
அன்னவாகனமேறி யானந்தமாக வுன் 
அடியேன் முன்வந்து நிற்பாய் 
அழகான காஞ்சியின் புகழாக வாழந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே    8

எந்தனைப் போலவே ஜெனன மெடுத்தோர்களுக்கு 
இன்பமாய் வாழ்ந் திருக்க 
யான் செய்த பாவமோ யித்தனை வறுமையினுள் 
உன்னடியேன் தவிப்பதம்மா 
உன்னையேதுணையென் றுறுதியாய் நம்பினேன் 
உன் பாதஞ் சாட்சியாக 
உன்னையன்றி வேறுதுணை யினியாரை யுங்காணேன் 
உலகந்தனி லெந்தனுக்கு 
பின்னை யொன்றெண்ணி நீ சொல்லாம லென்வறுமை 
போக்கடித் தென்னைரட்சி 
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல் 
பிரியமாய்க் காத்திடம்மா 
அன்னையே யின்னமுன்ன டியேனை ரட்சிக்க 
அட்டி செய்ய தேயம்மா 
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே    9

பாரதனிலுள்ளவும் பாக்கியத்தோடென்னைப் 
பாங்குட னிரட்சிக்கவும் 
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த 
பாலருக் கருள் புரியவும் 
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் 
செங்கலிய னணு காமலும் 
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து 
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும் 
பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமற் 
பிரியமாய்க் காத்திடம்மா 
பிரியமாயுன்மீதில் சிறியன்யான் சொன்னகவி 
பிழைகளைப் பொறுத்து ரட்சி 
ஆறதனில் மணல் குவித் தரியபூசை செய்தவென் 
னம்மையேகாம்பரி நீயே 
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே       10 

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது 
இப்பூமி தன்னி லம்மா 
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும் 
இனி ஜெனன் மெடுத் திடாமல் 
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான் 
முக்காலும் நம்பி னேனே 
முன்பின்னுந் தோணாத மனிதரைப் போலநீ 
முழித்திருக் காதே யம்மா 
வெற்றி பெற வுன்மீதில் பக்தியாய் நான் சொன்ன 
விருத்தங்கள் பதினொன்றையும் 
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை 
விமலனா சேரப் போறார் 
தனிட பாகமதை விட்டு வந்தேயென் 
அருங்குறை யைத்தீரு மம்மா 
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் 
அம்மை காமாட்சி யுமையே    11

காமாட்சி அம்மன் விருத்தம் பாடலின் பயன்கள்? / Kamakshi Virutham Benefits

காமாட்சி விருத்தம் பாடல் பாடுவதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன வென்றால் காமாட்சி அம்மனின் மீதுள்ள பக்தி அதிகரிக்கும் , நமக்கும்  நம்மை சார்ந்து உள்ளவர்களையும் காமாக்ஷி அம்மன் அருள் புரிந்து காப்பாள். நாம் செய்யும் செயலில் தெளிவும் புத்துணர்ச்சியும் அதிகரிக்கும் ஒரு உத்வேகம் கிடைக்கும்.

Post a Comment

2 Comments