ஸ்ரீ ராகு கால துர்க்கா அஷ்டகம்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
Also Read Durga Saptha Sloki Click Here
அம்மையானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மையானவள் துர்க்கா இன்ப மானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
உயிரு மானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் துர்க்கா எந்தன் உடமை யானவள்
பயிரு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறைவு மானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் துர்க்கா திருசூலி மாயவள்
திரு நீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
கருணை துர்கையே வீரக் கனக துர்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே என்ற நாமம் வரும் போதும் விரதம் இருப்பவர்கள் நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது..
0 Comments