Yama Deepam 2021 Tamil - Date & Time / 2021 யம தீபம் எப்போது ஏற்ற வேண்டும்?

யம தீபம் எப்போது ஏற்ற வேண்டும்?/ Yama Deepam 2021 Tamil - Date & Time

யம தீபம் தீபாவளி பண்டிகை முன் வரும் திரயோதசி திதி அன்று ஏற்ற வேண்டும். மேலும் இந்த ஆண்டு 2021 இல் எப்போது ஏற்ற வேண்டும் என்பதை இப்பதிவின் முடிவில் காணலாம்.

தீபம் ஏற்றும் முறை:

 உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், இந்து  பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.

யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

Yama Deepam 2021 Tamil - Date & Time  2021 யம தீபம் எப்போது ஏற்ற வேண்டும்
Yama Deepam 2021 Tamil - Date & Time  / 2021 யம தீபம் எப்போது ஏற்ற வேண்டும்

யாரெல்லாம் யம தீபம் ஏற்றலாம்?

  1. பரணி, மகம், சதையம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் யம தீபம் ஏற்றுவது சிறப்பு. நக்ஷத்திர ஸூக்தத்தில் பரணி நக்ஷத்திரத்திற்கு யமனையும் மகத்திற்கு பித்ருக்களை அதிதேவதையாகவும் கூறப்பட்டுள்ளது. வருஷாதி நூல்களில் சதயத்திற்கு யமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது.
  2. சனைச்சரனின் ஆதிக்கம் நிறைந்த நக்ஷத்திரங்களான பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நக்ஷத்திரங்களை ஜென்ம நக்ஷத்திரங்களாக பெற்றவர்கள்.
  3. யமனை அதிதேவதையாகக் கொண்ட சனைஸ்வர பகவான் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள்.
  4. ஆயுள் ஸ்தானத்தில் சனைஸ்வர பகவான் நீசம், வக்ரம் அல்லது பலமிழந்தவர்கள்.
  5. சூரியனும் சனைஸ்வரரும் சேர்க்கை பெற்றவர்கள்.
  6. ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாக கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாகக் கொண்ட கேதுவின் நக்ஷத்திரங்களில் அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திர சாரங்களில் நிற்க பெற்றவர்கள்.

யம தீபம் எங்கு ஏற்றலாம்?

1.துவாபர யுகத்தில் தோன்றிய மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயதில் ஆயுள் முடியும் என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தருணத்தில் மார்க்கண்டேயன், திருக்கடவூர் இறைவனை கட்டித் தழுவியபடி இருந்தான். அவனது உயிரைப் பறிக்க வந்த எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட இறைவன், தன் காலால் எமனை எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார். யமனையே சம்ஹாரம் செய்த ஸ்தலம் என்பதால் இதனை யம தண்டீஸ்வரர் என்றும் பிற்காலத்தில் தண்டீஸ்வரம் என்றும் மாறியதாக ஸ்தல புராணம் தெரிவிக்கின்றது. 

சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டி தவமிருந்தன. வேதங்களின் சிவ வழிபாட்டுக்கு இறங்கி காட்சி தந்த சிவபெருமான் வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருளினார்.

வேதங்கள் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால் "வேதச்சேரி' என்றழைக்கப்பட்டு, பின்பு "வேளச்சேரி' என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப்பெயராகும். அத்தகைய சிறப்பு பெற்ற சென்னை வேளச்சேரி யமதண்டீஸ்வரர் ஆலையத்தில் யம தீபம் ஏற்றினால் ஆயுள் கூடுவதோடு அகால மரணம் மற்றும் துர்மரணம் போன்றவைகளும் ஏற்படாது எனப் புராண செய்திகள் தெரிவிக்கின்றன.

2. மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் க்ஷேத்ரபாலகராக அமைந்து தனி சன்னதிபெற்ற யமதர்மராஜன் சன்னதி மற்றும் சனைச்சர பகவானின் பூச நக்ஷத்திர பைரவரான ஆசன பைரவர் சன்னதிகளிலும் ஏற்றலாம்.

3. தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள யமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதி.

4. திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஞீலிவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து யமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய யமன் சன்னதியில்.

4. அனைத்து சனி பரிகார ஸ்தலங்களில்.

5. அனைத்து சிவாலய சனைஸ்வரர் சன்னதிகளில்

6. யமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில்

7. அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றலாம்

8. யம தீபம் ஏற்றவேண்டிய காலம் ஆயுள்காரகன் சனி ஹோரை, பின் தர்ம ஸ்தானதிபதி குரு ஹோரை தென் திசையின் அதிபதி செவ்வாய் ஹோரை மற்றும் பித்ரு காரகனான சூரிய ஹோரை காலத்தில் ஏற்றலாம்.

யமதீபம் ஏற்றும்போது கூறவேண்டிய ஸ்லோகம்

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச|
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச||
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே|
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:||

மற்றும் 

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உருவாருஹமிவ பந்தனாத் ம்ருத்யோர் முச்சீய மாம்ருதாத்

எனும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தையும் உச்சரித்தபடி விளக்கேற்றி அகால ம்ருத்யூ ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம் சர்வ பாப க்ஷயகரம் தம் நமாமி மகேஸ்வரம் எனக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

2021 இல் யம தீபம் எப்போது ஏற்ற வேண்டும்?

இந்த ஆண்டு 2021 நவம்பர் 2ஆம் தேதி மாலை 5.41 pm மணி முதல் 6.58 pm மணிக்குள் தீபம் ஏற்றலாம்

Post a Comment

0 Comments